• Jul 03 2025

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும்! நீதி அமைச்சர் உறுதி

Chithra / Jun 5th 2025, 8:36 am
image


செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தவும், அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

கஜேந்திரகுமார எம்.பி முன்வைத்த விடயம் தொடர்பில் விசேட கவனத்தை செலுத்தியுள்ளதுடன், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன்,  துரிதமாக விசாரணைகளும் முன்னெடுக்கப்படும். 

இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பிலும் உங்களால் முன்வைக்கப்பட்டுள்ள விடயத்தின் முக்கியத்துவத்தை உணர்கின்றேன். அதன்படி இது தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கின்றேன் என்றார். 

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் நீதி அமைச்சர் உறுதி செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தவும், அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,கஜேந்திரகுமார எம்.பி முன்வைத்த விடயம் தொடர்பில் விசேட கவனத்தை செலுத்தியுள்ளதுடன், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன்,  துரிதமாக விசாரணைகளும் முன்னெடுக்கப்படும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பிலும் உங்களால் முன்வைக்கப்பட்டுள்ள விடயத்தின் முக்கியத்துவத்தை உணர்கின்றேன். அதன்படி இது தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கின்றேன் என்றார். 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now