சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் வலுவூட்டலையும் சமூகப் பங்களிப்பையும் கௌரவிக்கும் விசேட நிகழ்வு இன்றைய தினம் யாழ் வடமராட்சி கிழக்கு கலாச்சார மண்டபத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது
பல்துறை சார்ந்த ஆளுமைகளின் பங்கேற்புடன் இடம்பெறும் இந்த நிகழ்வு, பெண்களின் முன்னேற்றத்திற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது
இவ் நிகழ்வானது வடமராட்சி கிழக்குபிரதேச செயலர் உஷா சுபாங்கன் தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பமாகியது .
மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்தைத் தொடர்ந்து, பாரம்பரிய வரவேற்பு நடனம் விருந்தினர்களை வரவேற்றது.
அதனைத் தொடர்ந்து வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களின் உரைகளை நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட உதவி மாவட்டச் செயலாளர் (யாழ் மாவட்ட செயலகம்) உ. முத்திரகணேஸ்வரன் தர்சினி உரையாற்றுகையில், சமூக மாற்றத்தில் பெண்களின் வகிபாகம் குறித்து ஆழமான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக நிருபா நரேந்திரன் (சுகாதார வைத்திய அதிகாரி, மருதங்கேணி), நிரோமிலா லக்ஷன் (சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம்)
ஆகியோர் கலந்துகொண்டு பெண்களின் ஆரோக்கியம் மற்றும் கல்வி சார்ந்து விழிப்புணர்வு உரைகளை வழங்கினர்.
நிகழ்வின் சிறப்பம்சமாக மகளிர் தினச் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கலைத்திறன்கள் வெளிப்படுத்தப்பட்டன
பின்னர் கலை நிகழ்வுகளாக குழு நடனங்கள் மற்றும் கவிதை வாசிப்புகள்,பெண்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் விழிப்புணர்வு நாடகம்,
சிலம்பாட்ட ஆற்றுகை போன்ற வீரக் கலைகளும் இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், வாழ்வாதார உதவித் திட்டங்கள் மற்றும் வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் வகையில் விதைப் பொதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன
மேலும், சமூகத்தில் சாதனை படைத்த மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பெண்களுக்குப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக மகளிர் வாழ்வாதாரச் சங்கங்களின் பிரதிநிதிகள், FAIRMED நிறுவனம் மற்றும் FRIENDS நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இறுதியாக பெண்களின் உரிமைகளையும் அவர்களின் சாதனைகளையும் கொண்டாடும் வகையில் அமைந்த இந்த விழா, நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது. "பெண்களால் முடியும்" என்ற நம்பிக்கையை விதைத்த இந்த நிகழ்வு, அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
வடமராட்சி கிழக்கில் சர்வதேச மகளிர் தின விழா எழுச்சியுடன் ஆரம்பம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் வலுவூட்டலையும் சமூகப் பங்களிப்பையும் கௌரவிக்கும் விசேட நிகழ்வு இன்றைய தினம் யாழ் வடமராட்சி கிழக்கு கலாச்சார மண்டபத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது பல்துறை சார்ந்த ஆளுமைகளின் பங்கேற்புடன் இடம்பெறும் இந்த நிகழ்வு, பெண்களின் முன்னேற்றத்திற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது இவ் நிகழ்வானது வடமராட்சி கிழக்குபிரதேச செயலர் உஷா சுபாங்கன் தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பமாகியது .மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்தைத் தொடர்ந்து, பாரம்பரிய வரவேற்பு நடனம் விருந்தினர்களை வரவேற்றது.அதனைத் தொடர்ந்து வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.சிறப்பு விருந்தினர்களின் உரைகளை நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட உதவி மாவட்டச் செயலாளர் (யாழ் மாவட்ட செயலகம்) உ. முத்திரகணேஸ்வரன் தர்சினி உரையாற்றுகையில், சமூக மாற்றத்தில் பெண்களின் வகிபாகம் குறித்து ஆழமான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.சிறப்பு விருந்தினர்களாக நிருபா நரேந்திரன் (சுகாதார வைத்திய அதிகாரி, மருதங்கேணி), நிரோமிலா லக்ஷன் (சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம்)ஆகியோர் கலந்துகொண்டு பெண்களின் ஆரோக்கியம் மற்றும் கல்வி சார்ந்து விழிப்புணர்வு உரைகளை வழங்கினர்.நிகழ்வின் சிறப்பம்சமாக மகளிர் தினச் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கலைத்திறன்கள் வெளிப்படுத்தப்பட்டனபின்னர் கலை நிகழ்வுகளாக குழு நடனங்கள் மற்றும் கவிதை வாசிப்புகள்,பெண்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் விழிப்புணர்வு நாடகம்,சிலம்பாட்ட ஆற்றுகை போன்ற வீரக் கலைகளும் இடம்பெற்றன.அதனை தொடர்ந்து பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், வாழ்வாதார உதவித் திட்டங்கள் மற்றும் வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் வகையில் விதைப் பொதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டனமேலும், சமூகத்தில் சாதனை படைத்த மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பெண்களுக்குப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக மகளிர் வாழ்வாதாரச் சங்கங்களின் பிரதிநிதிகள், FAIRMED நிறுவனம் மற்றும் FRIENDS நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.இறுதியாக பெண்களின் உரிமைகளையும் அவர்களின் சாதனைகளையும் கொண்டாடும் வகையில் அமைந்த இந்த விழா, நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது. "பெண்களால் முடியும்" என்ற நம்பிக்கையை விதைத்த இந்த நிகழ்வு, அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.