• May 24 2026

சர்வதேச உளநல தினம் விழிப்புணர்வு நடைபவனி; பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையினரால் முன்னெடுப்பு!

shanu / Sep 26th 2025, 9:48 am
image

சர்வதேச உள நல தினத்தை முன்னிட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையினரால் உள நல விழிப்புணர்வு நடை பவனி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. 


 உள நல விழிப்புணர்வு நடை பவனி இன்று காலை 7:30 மணியளவில் நெல்லியடி மாலை சந்தையிலிருந்து ஆரம்பமாக மந்திகை சந்தி, சிலையடி சந்தி, ஊடாக சரசாலை வீதியூடாக மந்திகை சந்தை வழியாக  மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்றது


இந் நடை பவனியை யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நடை பவனியை தொடக்கி வைத்தார்.


பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பதில் மருத்துவ அத்தியட்சகர் தலமையில் இடம் பெற்ற  நடைபவனியில் பருத்தித்துறை நகரபிதா வின்சன் டிபோல் டக்ளஸ் போல்,  பருத்தித்துறை பிரதேச சபை உப தவிசாளர், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள்,  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விசேட மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 


இதற்க்கான அனுசரணைகளை AIA காப்புறுதி, மற்றும் ஆப்பிக்கோ நிறுவனங்கள் வழங்கியிருந்தன.

சர்வதேச உளநல தினம் விழிப்புணர்வு நடைபவனி; பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையினரால் முன்னெடுப்பு சர்வதேச உள நல தினத்தை முன்னிட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையினரால் உள நல விழிப்புணர்வு நடை பவனி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.  உள நல விழிப்புணர்வு நடை பவனி இன்று காலை 7:30 மணியளவில் நெல்லியடி மாலை சந்தையிலிருந்து ஆரம்பமாக மந்திகை சந்தி, சிலையடி சந்தி, ஊடாக சரசாலை வீதியூடாக மந்திகை சந்தை வழியாக  மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்றதுஇந் நடை பவனியை யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நடை பவனியை தொடக்கி வைத்தார்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பதில் மருத்துவ அத்தியட்சகர் தலமையில் இடம் பெற்ற  நடைபவனியில் பருத்தித்துறை நகரபிதா வின்சன் டிபோல் டக்ளஸ் போல்,  பருத்தித்துறை பிரதேச சபை உப தவிசாளர், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள்,  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விசேட மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதற்க்கான அனுசரணைகளை AIA காப்புறுதி, மற்றும் ஆப்பிக்கோ நிறுவனங்கள் வழங்கியிருந்தன.

Advertisement

Advertisement

Advertisement