• May 17 2026

சர்வதேச வலுசக்தி நெருக்கடி:கட்சித் தலைவர்களுடன் அநுர அவசர ஆலோசனை!

shanu / Mar 21st 2026, 8:00 pm
image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.


மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள உலகளாவிய வலுசக்தி நெருக்கடி குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.


மத்திய கிழக்கின் தற்போதைய பதற்றமான சூழ்நிலை காரணமாக உலக அளவில் எழுந்துள்ள எரிசக்தி தட்டுப்பாடு, இலங்கையின் வலுசக்தித் துறை மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய நேரடித் தாக்கங்கள் குறித்து ஜனாதிபதி இதன்போது விளக்கமளித்தார்.


இந்த நெருக்கடி நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக அரசு தற்போது எடுத்துள்ள அவசர நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி கட்சித் தலைவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.


நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அனைத்துத் தரப்பினரினதும் ஒத்துழைப்பின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.


இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

சர்வதேச வலுசக்தி நெருக்கடி:கட்சித் தலைவர்களுடன் அநுர அவசர ஆலோசனை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள உலகளாவிய வலுசக்தி நெருக்கடி குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.மத்திய கிழக்கின் தற்போதைய பதற்றமான சூழ்நிலை காரணமாக உலக அளவில் எழுந்துள்ள எரிசக்தி தட்டுப்பாடு, இலங்கையின் வலுசக்தித் துறை மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய நேரடித் தாக்கங்கள் குறித்து ஜனாதிபதி இதன்போது விளக்கமளித்தார்.இந்த நெருக்கடி நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக அரசு தற்போது எடுத்துள்ள அவசர நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி கட்சித் தலைவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அனைத்துத் தரப்பினரினதும் ஒத்துழைப்பின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement