முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் புதிய கிராம மகளீர் அமைப்பின் ஒழுங்குபடுத்தலில், கான்பெரா தமிழ் சங்கத்தின் நிதி பங்களிப்புடன் மகளீர்களின் சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் வட்டியில்லா கடன் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் (29) இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வின் மூலம் 10 மகளீர் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் தலா 50,000 ரூபா வீதம் மொத்தமாக 5 இலட்சம் ரூபா நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.
பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும், சுயதொழில் வாய்ப்புகளையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலன், மகளீர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒட்டிசுட்டானில் வட்டியில்லா கடன் வழங்கி வைப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் புதிய கிராம மகளீர் அமைப்பின் ஒழுங்குபடுத்தலில், கான்பெரா தமிழ் சங்கத்தின் நிதி பங்களிப்புடன் மகளீர்களின் சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் வட்டியில்லா கடன் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் (29) இடம்பெற்றிருந்தது.இந்நிகழ்வின் மூலம் 10 மகளீர் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் தலா 50,000 ரூபா வீதம் மொத்தமாக 5 இலட்சம் ரூபா நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும், சுயதொழில் வாய்ப்புகளையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலன், மகளீர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.