• May 23 2026

முதலில் குண்டுத்தாக்குதல் குற்றச்சாட்டு இப்போது போதைப்பொருள் குற்றச்சாட்டு - ஆதாரபூர்வமாக நிரூபிக்குமாறு நாமல் சவால்

Chithra / Sep 17th 2025, 8:30 am
image

 

போதைப்பொருள் விவகாரத்தையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என ஸ்ரீலங்கா பொதுஜன தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார்.

ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில் 

எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை இலக்கு வைத்து குறிப்பாக எமது கட்சியின் உறுப்பினர்களை இலக்கு வைத்து அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது. 

அண்மையில் தெற்கு மாகாணத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட போதைப்பொருள் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொள்கலன்கள் சுங்கத்தில் இருந்து தான் விடுவிக்கப்பட்டுள்ளது.வானத்தில் இருந்து ஒன்றும் விழவில்லை. ஆகவே இந்த கொள்கலன் விடுப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.

சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சொல்வது உண்மையா, பொலிஸ்மா அதிபர் சொல்வது உண்மையா என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்கும், ராஜபக்ஷர்களுக்கும் தொடர்புண்டு என்று அரசாங்கம் தேர்தல் மேடைகளில் குற்றஞ்சாட்டியது. ஆனால் இதுவரையில் அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.

தற்போது போதைப்பொருள் விவகாரத்துக்கும் ராஜபக்ஷர்களுக்கும் தொடர்புண்டு என்று குறிப்பிடப்படுகிறது. குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை போன்று அவற்றை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்றார்.

முதலில் குண்டுத்தாக்குதல் குற்றச்சாட்டு இப்போது போதைப்பொருள் குற்றச்சாட்டு - ஆதாரபூர்வமாக நிரூபிக்குமாறு நாமல் சவால்  போதைப்பொருள் விவகாரத்தையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என ஸ்ரீலங்கா பொதுஜன தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார்.ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை இலக்கு வைத்து குறிப்பாக எமது கட்சியின் உறுப்பினர்களை இலக்கு வைத்து அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது. அண்மையில் தெற்கு மாகாணத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட போதைப்பொருள் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த கொள்கலன்கள் சுங்கத்தில் இருந்து தான் விடுவிக்கப்பட்டுள்ளது.வானத்தில் இருந்து ஒன்றும் விழவில்லை. ஆகவே இந்த கொள்கலன் விடுப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சொல்வது உண்மையா, பொலிஸ்மா அதிபர் சொல்வது உண்மையா என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்கும், ராஜபக்ஷர்களுக்கும் தொடர்புண்டு என்று அரசாங்கம் தேர்தல் மேடைகளில் குற்றஞ்சாட்டியது. ஆனால் இதுவரையில் அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.தற்போது போதைப்பொருள் விவகாரத்துக்கும் ராஜபக்ஷர்களுக்கும் தொடர்புண்டு என்று குறிப்பிடப்படுகிறது. குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை போன்று அவற்றை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement