• Apr 14 2026

வடக்கு, கிழக்குக்கும் வருகின்றார் இந்தியாவின் துணை ஜனாதிபதி!

Chithra / Apr 12th 2026, 3:29 pm
image

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இரு நாள் பயணமாக எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை வருகின்றார். 


இவ்விஜயத்தின்போது அவர் வடக்கு, கிழக்குக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரியவருகின்றது.


கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கித் திட்டம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு திட்டங்களை அவர் பார்வையிடவுள்ளார்.


முல்லைத்தீவு, தெனியாய மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் மூன்று மருத்துவமனைத் திட்டங்கள் உள்ளிட்ட இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களையும் அவர் பார்வையிடுவார் என்று வெளிவிவகார வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.


இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புதிய உடன்பாடுகளும் கையெழுத்திடப்படும் என்றும் அவர் கூறினார்.


அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி  அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் தமிழ் மற்றும் மலையகத் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் இந்தியத் துணை ஜனாதிபதி பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

வடக்கு, கிழக்குக்கும் வருகின்றார் இந்தியாவின் துணை ஜனாதிபதி இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இரு நாள் பயணமாக எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை வருகின்றார். இவ்விஜயத்தின்போது அவர் வடக்கு, கிழக்குக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரியவருகின்றது.கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கித் திட்டம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு திட்டங்களை அவர் பார்வையிடவுள்ளார்.முல்லைத்தீவு, தெனியாய மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் மூன்று மருத்துவமனைத் திட்டங்கள் உள்ளிட்ட இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களையும் அவர் பார்வையிடுவார் என்று வெளிவிவகார வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புதிய உடன்பாடுகளும் கையெழுத்திடப்படும் என்றும் அவர் கூறினார்.அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி  அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் தமிழ் மற்றும் மலையகத் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் இந்தியத் துணை ஜனாதிபதி பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement