இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், இந்திய அரசு வழங்கக்கூடிய விசேட சலுகைகள் மற்றும் திட்டங்கள் குறித்து தமிழ் முற்போக்குக் கூட்டணி, இந்தியத் தூதுவரிடம் முக்கிய முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மனோ கணேசன் எம்.பி. தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியினர், இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் முன்வைத்த பிரதான கோரிக்கைகள் வருமாறு,
இலங்கையில் வாழும் 15 இலட்சம் இந்திய வம்சாவளித் தமிழர்களில் விரும்புவோருக்கு, தகுதியின் அடிப்படையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI)அந்தஸ்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மொரீஷியஸ் நாட்டில் இந்திய வம்சாவளியினருக்கு வழங்கப்படும் OCI கட்டமைப்பை இலங்கையிலும் நடைமுறைப்படுத்தலாம்.
1964ஆம் ஆண்டின் சிறிமா–சாஸ்திரி ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் வரலாற்றை அங்கீகரிப்பதற்கும், அவர்களின் கல்வி, தொழில் மற்றும் வாழ்வாதார பாதுகாப்புக்கும் இது ஒரு 'சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கையாக அமையும் என மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.
1946 முதல் இயங்கி வரும் 'இலங்கை தோட்ட தொழிலாளர் கல்வி அறக்கட்டளை' (CEWET) என்பதை, இன்றைய சமூக மாற்றத்திற்கு ஏற்ப “இந்திய வம்சாவளி தமிழர்-சமூக மேம்பாட்டு அறக்கட்டளை (IOT-CDT)” எனப் பெயர் மாற்றம் செய்து விரிவுபடுத்த வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டது.
இதன் கீழ் பின்வரும் திட்டங்கள் முன்மொழியப்பட்டன
புலமைப்பரிசில்:மாணவர்களுக்கான உதவித்தொகை மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்.
ஆசிரியர் பயிற்சி:கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்காகத் தமிழ் மொழி மூலமான ஆசிரியர் பயிற்சி கல்லூரியை நிறுவுதல்.
தாதியர் பயிற்சி:மலையகப் பெண்களுக்காகப் பிரத்யேக தாதியர் பயிற்சி நிறுவனத்தை அமைத்தல்.
சர்வதேச பள்ளிகள்:இந்திய நவோதயா பள்ளிகளின் முறைப்படி 'இந்து சர்வதேச பள்ளிகளை' இலங்கையில் நிறுவுதல்.
மலையகப் பல்கலைக்கழகம்:நுவரேலியா மாவட்டத்தில் தமிழகப் பல்கலைக்கழகம் ஒன்றின் அங்கீகாரத்துடன் "மலையகப் பல்கலைக்கழக வளாகத்தை" (High-Lands University Campus) உருவாக்கி, அதனைப் பிற்காலத்தில் தேசியப் பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்துதல்.
சந்திப்பின் பின்னணி-"இன்று 10 இலட்சம் பேர் தோட்டப் பகுதிகளில் வாழ்ந்தாலும், ஒரு இலட்சம் பேர் மட்டுமே தோட்டத் தொழிலாளர்களாக உள்ளனர். ஏனையோர் சுயமுயற்சியால் பல்வேறு துறைகளில் வளர்ந்து ஒரு தேசியச் சிறுபான்மை இனமாக உருமாற்றம் அடைந்துள்ளனர். இவர்களின் தார்மீகப் பொறுப்பு இந்தியாவிற்கு உண்டு." - என்று மனோ கணேசன் எம்.பி. இதன்போது தெரிவித்தார்.
இச்சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் வே.இராதாகிருஷ்ணன், அரசியல் குழு உறுப்பினர் பாரத் அருள்சாமி மற்றும் இந்திய அரசியல் துறை கவுன்சிலர் ராம் பாபு ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கை மலையகத் தமிழருக்கும் இந்தியக் கடல் கடந்த குடியுரிமை- இந்தியத் தூதுவரிடம் மனோ அணி பகிரங்கக் கோரிக்கை இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், இந்திய அரசு வழங்கக்கூடிய விசேட சலுகைகள் மற்றும் திட்டங்கள் குறித்து தமிழ் முற்போக்குக் கூட்டணி, இந்தியத் தூதுவரிடம் முக்கிய முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளது.கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மனோ கணேசன் எம்.பி. தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியினர், இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் முன்வைத்த பிரதான கோரிக்கைகள் வருமாறு,இலங்கையில் வாழும் 15 இலட்சம் இந்திய வம்சாவளித் தமிழர்களில் விரும்புவோருக்கு, தகுதியின் அடிப்படையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI)அந்தஸ்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.மொரீஷியஸ் நாட்டில் இந்திய வம்சாவளியினருக்கு வழங்கப்படும் OCI கட்டமைப்பை இலங்கையிலும் நடைமுறைப்படுத்தலாம்.1964ஆம் ஆண்டின் சிறிமா–சாஸ்திரி ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் வரலாற்றை அங்கீகரிப்பதற்கும், அவர்களின் கல்வி, தொழில் மற்றும் வாழ்வாதார பாதுகாப்புக்கும் இது ஒரு 'சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கையாக அமையும் என மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.1946 முதல் இயங்கி வரும் 'இலங்கை தோட்ட தொழிலாளர் கல்வி அறக்கட்டளை' (CEWET) என்பதை, இன்றைய சமூக மாற்றத்திற்கு ஏற்ப “இந்திய வம்சாவளி தமிழர்-சமூக மேம்பாட்டு அறக்கட்டளை (IOT-CDT)” எனப் பெயர் மாற்றம் செய்து விரிவுபடுத்த வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டது.இதன் கீழ் பின்வரும் திட்டங்கள் முன்மொழியப்பட்டனபுலமைப்பரிசில்:மாணவர்களுக்கான உதவித்தொகை மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்.ஆசிரியர் பயிற்சி:கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்காகத் தமிழ் மொழி மூலமான ஆசிரியர் பயிற்சி கல்லூரியை நிறுவுதல்.தாதியர் பயிற்சி:மலையகப் பெண்களுக்காகப் பிரத்யேக தாதியர் பயிற்சி நிறுவனத்தை அமைத்தல்.சர்வதேச பள்ளிகள்:இந்திய நவோதயா பள்ளிகளின் முறைப்படி 'இந்து சர்வதேச பள்ளிகளை' இலங்கையில் நிறுவுதல்.மலையகப் பல்கலைக்கழகம்:நுவரேலியா மாவட்டத்தில் தமிழகப் பல்கலைக்கழகம் ஒன்றின் அங்கீகாரத்துடன் "மலையகப் பல்கலைக்கழக வளாகத்தை" (High-Lands University Campus) உருவாக்கி, அதனைப் பிற்காலத்தில் தேசியப் பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்துதல்.சந்திப்பின் பின்னணி-"இன்று 10 இலட்சம் பேர் தோட்டப் பகுதிகளில் வாழ்ந்தாலும், ஒரு இலட்சம் பேர் மட்டுமே தோட்டத் தொழிலாளர்களாக உள்ளனர். ஏனையோர் சுயமுயற்சியால் பல்வேறு துறைகளில் வளர்ந்து ஒரு தேசியச் சிறுபான்மை இனமாக உருமாற்றம் அடைந்துள்ளனர். இவர்களின் தார்மீகப் பொறுப்பு இந்தியாவிற்கு உண்டு." - என்று மனோ கணேசன் எம்.பி. இதன்போது தெரிவித்தார்.இச்சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் வே.இராதாகிருஷ்ணன், அரசியல் குழு உறுப்பினர் பாரத் அருள்சாமி மற்றும் இந்திய அரசியல் துறை கவுன்சிலர் ராம் பாபு ஆகியோரும் கலந்துகொண்டனர்.