• Nov 22 2025

மஹிந்தவைச் சந்தித்த இந்தியத் துணைத் தூதர் - பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவிப்பு

Chithra / Nov 18th 2025, 8:01 pm
image


இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

இதன்போது இந்தியத் துணைத் தூதுவர்  ஸ்ரீ ஹர்விந்தர் சிங் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இடையில் முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

மஹிந்த ராஜபக்ஷவின் இன்றைய 80 ஆவது பிறந்தநாளுக்கு, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா சார்பில் இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்காக அரசால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் கடந்த செப்டெம்பர் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் தங்கியிருந்த கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்திலிருந்து செப்டெம்பர் 11 ஆம் திகதி வெளியேறி, அம்பாந்தோட்டை - தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்துக்குக் குடிபெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.


மஹிந்தவைச் சந்தித்த இந்தியத் துணைத் தூதர் - பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவிப்பு இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.இந்தச் சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.இதன்போது இந்தியத் துணைத் தூதுவர்  ஸ்ரீ ஹர்விந்தர் சிங் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இடையில் முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.மஹிந்த ராஜபக்ஷவின் இன்றைய 80 ஆவது பிறந்தநாளுக்கு, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா சார்பில் இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்காக அரசால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் கடந்த செப்டெம்பர் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் தங்கியிருந்த கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்திலிருந்து செப்டெம்பர் 11 ஆம் திகதி வெளியேறி, அம்பாந்தோட்டை - தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்துக்குக் குடிபெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement