இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (08) இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானத்தில் இன்று பிற்பகல் 1.25 மணியளவில் அவர் இலங்கையை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ராஜ்நாத் சிங், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்.
விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்த உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை அவர் சந்திக்கவுள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இந்த விஜயத்தின் போது மீளாய்வு செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இலங்கையில் வாழும் இந்திய சமூகத்தினருடனும் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீண்டகால உறவுகள் மற்றும் ஆழமான வரலாற்று, நாகரிகத் தொடர்புகளுக்கு அப்பால், இந்தியாவின் ‘Neighbourhood First’ மற்றும் ‘MAHASAGAR’ முன்னெடுப்புகளின் கீழ் இலங்கை மிக முக்கியமான பங்காளிகளில் ஒன்றாக விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு, பொருளாதார ஈடுபாடு, கடல்சார் விவகாரங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த விஜயத்தின் போது முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வது இந்த விஜயத்தின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கையை வந்தடைந்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (08) இலங்கையை வந்தடைந்துள்ளார்.இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானத்தில் இன்று பிற்பகல் 1.25 மணியளவில் அவர் இலங்கையை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ராஜ்நாத் சிங், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்.விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்த உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை அவர் சந்திக்கவுள்ளார்.மேலும், கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இந்த விஜயத்தின் போது மீளாய்வு செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அத்துடன், இலங்கையில் வாழும் இந்திய சமூகத்தினருடனும் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.நீண்டகால உறவுகள் மற்றும் ஆழமான வரலாற்று, நாகரிகத் தொடர்புகளுக்கு அப்பால், இந்தியாவின் ‘Neighbourhood First’ மற்றும் ‘MAHASAGAR’ முன்னெடுப்புகளின் கீழ் இலங்கை மிக முக்கியமான பங்காளிகளில் ஒன்றாக விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பாதுகாப்பு, பொருளாதார ஈடுபாடு, கடல்சார் விவகாரங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த விஜயத்தின் போது முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வது இந்த விஜயத்தின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்துள்ளது.