• Dec 02 2025

நுவரெலியா - கொத்மலை பகுதிகளில் காயமடைந்தவர்களை மீட்ட இந்திய விமானப்படை

dileesiya / Dec 1st 2025, 5:44 pm
image

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம், நுவரெலியா மற்றும் கொத்மலை பகுதிகளில் அனர்த்தங்களால் காயமடைந்தவர்கள் மற்றும் குழந்தைகள் குழுவொன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டு, கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 


அதேவேளை, குறித்த ஹெலிகொப்டர் மூலம் நுவரெலியா மற்றும் கொத்மலை பகுதிகளில் சிக்கித் தவித்த மக்களுக்கு சுமார் 1844 கிலோ கிராம் உலர்ந்த உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 


இந்தியா அரசு இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்காக வழங்கியிருந்த MI 17 என்ற ஹெலிகொப்டர் மூலமே இன்றைய தினம் (01) இந்த மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.


நுவரெலியா - கொத்மலை பகுதிகளில் காயமடைந்தவர்களை மீட்ட இந்திய விமானப்படை இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம், நுவரெலியா மற்றும் கொத்மலை பகுதிகளில் அனர்த்தங்களால் காயமடைந்தவர்கள் மற்றும் குழந்தைகள் குழுவொன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டு, கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதேவேளை, குறித்த ஹெலிகொப்டர் மூலம் நுவரெலியா மற்றும் கொத்மலை பகுதிகளில் சிக்கித் தவித்த மக்களுக்கு சுமார் 1844 கிலோ கிராம் உலர்ந்த உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்தியா அரசு இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்காக வழங்கியிருந்த MI 17 என்ற ஹெலிகொப்டர் மூலமே இன்றைய தினம் (01) இந்த மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement