• Jul 09 2025

மின் கட்டண அதிகரிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு - வகுப்புகளின் கட்டணங்களும் அதிகரிப்பு

Chithra / Jun 21st 2025, 11:44 am
image


மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த முடிவால், அத்தியாவசிய நுகர்வு பொருட்களின் விலைகளும் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அதேவேளை, நாடு முழுவதும் அரிசி, தேங்காய், காய்கறிகள், மீன், இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சந்தையில் பெருமளவில் உயர்ந்துள்ளதால், மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

அத்துடன் சவர்க்காரம், சலவைத்தூள், பற்பசை மற்றும் ஷம்போ போன்ற பொருட்களின் விலைகளும் கடுமையாக அதிகரித்துள்ளன.

வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்கள் நுகர்வுப் பொருட்களை தன்னிச்சையான விலையில் விற்பனை செய்வதால் நுகர்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதால், அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு விலைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று நுகர்வோர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், பல கல்வி கற்பிக்கும் வகுப்புகளின் கட்டணங்கள் பெருமளவில் அதிகரித்ததால் பெற்றோர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சர் தலையிட்டு சரியான முடிவை எடுக்குமாறு பெற்றோர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

மின் கட்டண அதிகரிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு - வகுப்புகளின் கட்டணங்களும் அதிகரிப்பு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த முடிவால், அத்தியாவசிய நுகர்வு பொருட்களின் விலைகளும் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.அதேவேளை, நாடு முழுவதும் அரிசி, தேங்காய், காய்கறிகள், மீன், இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சந்தையில் பெருமளவில் உயர்ந்துள்ளதால், மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.அத்துடன் சவர்க்காரம், சலவைத்தூள், பற்பசை மற்றும் ஷம்போ போன்ற பொருட்களின் விலைகளும் கடுமையாக அதிகரித்துள்ளன.வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்கள் நுகர்வுப் பொருட்களை தன்னிச்சையான விலையில் விற்பனை செய்வதால் நுகர்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதால், அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு விலைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று நுகர்வோர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதற்கிடையில், பல கல்வி கற்பிக்கும் வகுப்புகளின் கட்டணங்கள் பெருமளவில் அதிகரித்ததால் பெற்றோர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சர் தலையிட்டு சரியான முடிவை எடுக்குமாறு பெற்றோர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now