• Jul 12 2025

உலக சந்தையில் பால்மா விலை அதிகரிப்பு - உள்நாட்டில் தாக்கம் செலுத்துமா?

shanuja / Jul 11th 2025, 10:33 am
image

உலக சந்தையில் பால்மா விலை அதிகரித்ததைத் தொடர்ந்து உள்நாட்டு பால்மா விலையிலும் அதிகரிப்பு ஏற்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 


இது தொடர்பில் மில்கோ நிறுவனத்தின் தலைவர் ஹேமஜீவ கோட்டாபாய தெரிவிக்கையில், 

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

  

எதிர்கால சந்தை நடவடிக்கைகளைக் கண்காணித்ததன் பின்னரே மேலதிக நடவடிக்கை முன்னெடுக்கப்படும். 


உலக சந்தையில் பால்மாவின் விலை 8 வீதத்தினால் அதிகரித்துள்ளதனால் இறக்குமதி செய்யப்படும், 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலையை 100 ரூபாவால் அதிகரிப்பதற்கு நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

 

அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, இந்த மாதம் முதல் புதிய விலைத் திருத்தத்திற்கு அமைய சந்தைக்கு பால்மா விடுவிக்கப்படும். 


எவ்வாறாயினும் உலக சந்தையில் பால்மாவின் விலை குறைவடையும் பட்சத்தில், உள்நாட்டு சந்தையிலும் பால்மாவின் விலை குறைக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.- என்றார்.

உலக சந்தையில் பால்மா விலை அதிகரிப்பு - உள்நாட்டில் தாக்கம் செலுத்துமா உலக சந்தையில் பால்மா விலை அதிகரித்ததைத் தொடர்ந்து உள்நாட்டு பால்மா விலையிலும் அதிகரிப்பு ஏற்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பில் மில்கோ நிறுவனத்தின் தலைவர் ஹேமஜீவ கோட்டாபாய தெரிவிக்கையில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.   எதிர்கால சந்தை நடவடிக்கைகளைக் கண்காணித்ததன் பின்னரே மேலதிக நடவடிக்கை முன்னெடுக்கப்படும். உலக சந்தையில் பால்மாவின் விலை 8 வீதத்தினால் அதிகரித்துள்ளதனால் இறக்குமதி செய்யப்படும், 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலையை 100 ரூபாவால் அதிகரிப்பதற்கு நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.  அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, இந்த மாதம் முதல் புதிய விலைத் திருத்தத்திற்கு அமைய சந்தைக்கு பால்மா விடுவிக்கப்படும். எவ்வாறாயினும் உலக சந்தையில் பால்மாவின் விலை குறைவடையும் பட்சத்தில், உள்நாட்டு சந்தையிலும் பால்மாவின் விலை குறைக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement