• Mar 10 2026

வடமராட்சிப் பகுதியில் சட்டவிரோத செயல்கள் அதிகரிப்பு; மண் கடத்தல்காரர்களை துரத்தும் பொலிசார்

Chithra / Mar 10th 2026, 10:53 am
image

 

யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸார் சட்டவிரோதமாக மணல் அகழும் வாகனங்களை துரத்தி செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது.


வடமராட்சி வடக்கு பிரதேசத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நெல்லியடி பொலிஸார்  ஈடுபட்டு வருகின்றனர்.


அதன்படி நேற்று நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னாலை பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிக்கொண்டிருப்பதாக நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.  


சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரை அவதானித்த கள்ள மண் கடத்தல்காரர்கள், சிறிய ரக வாகனத்துடன் தப்பி செல்ல முற்பட்டவேளை, அதனை நீண்ட தூரம் இரண்டு பொலிஸார்  மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்ற காட்சி தற்போது வெளியாகியுள்ளன.


வடமராட்சி கிழக்கில் தற்போது இரண்டு டிப்பர்கள் தலா 4 தடவைகள் சட்டவிரோத மணல் அகழ்வு விநியோகத்தில் ஈடுபடுவதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 


வடமராட்சிப் பகுதியில் சட்டவிரோத செயல்கள் அதிகரிப்பு; மண் கடத்தல்காரர்களை துரத்தும் பொலிசார்  யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸார் சட்டவிரோதமாக மணல் அகழும் வாகனங்களை துரத்தி செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது.வடமராட்சி வடக்கு பிரதேசத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நெல்லியடி பொலிஸார்  ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி நேற்று நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னாலை பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிக்கொண்டிருப்பதாக நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.  சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரை அவதானித்த கள்ள மண் கடத்தல்காரர்கள், சிறிய ரக வாகனத்துடன் தப்பி செல்ல முற்பட்டவேளை, அதனை நீண்ட தூரம் இரண்டு பொலிஸார்  மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்ற காட்சி தற்போது வெளியாகியுள்ளன.வடமராட்சி கிழக்கில் தற்போது இரண்டு டிப்பர்கள் தலா 4 தடவைகள் சட்டவிரோத மணல் அகழ்வு விநியோகத்தில் ஈடுபடுவதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement