• May 12 2026

சட்டசபையில் கோட் சூட்டில் முதலமைச்சர் விஜய்; உறுப்பினராக பொறுப்பேற்றார்

Chithra / May 11th 2026, 12:33 pm
image

தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் 17வது சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினராக முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றார். 


இதனடிப்படையில், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் எம்எல்ஏவாக பதவியேற்று கொண்டார்.


முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு கோட்-சூட்டில் வந்த ஜோசப் விஜய், இன்று சட்டசபையில் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளிலும் கோட்-சூட் அணிந்து வந்து பங்கேற்றுள்ளார். 


இன்று சட்டசபையில் உறுப்பினராக பதவியேற்கும் போது, ‘உளமார உறுதி கூறுகிறேன்..’ என முதல்மைச்சர் விஜய் கூறினார்.


அவரைத் தொடர்ந்து  9 அமைச்சர்களும், அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து உறுப்பினர்களும் பதவியேற்றனர்.


மேலும்  உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார்.


போடி தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எம்எல்ஏவாக பதவியேற்றார்.


சான்றிதழ் கொண்டு வராததன் காரணமாக அமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சட்டசபையில் கோட் சூட்டில் முதலமைச்சர் விஜய்; உறுப்பினராக பொறுப்பேற்றார் தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் 17வது சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினராக முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றார். இதனடிப்படையில், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் எம்எல்ஏவாக பதவியேற்று கொண்டார்.முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு கோட்-சூட்டில் வந்த ஜோசப் விஜய், இன்று சட்டசபையில் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளிலும் கோட்-சூட் அணிந்து வந்து பங்கேற்றுள்ளார். இன்று சட்டசபையில் உறுப்பினராக பதவியேற்கும் போது, ‘உளமார உறுதி கூறுகிறேன்.’ என முதல்மைச்சர் விஜய் கூறினார்.அவரைத் தொடர்ந்து  9 அமைச்சர்களும், அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து உறுப்பினர்களும் பதவியேற்றனர்.மேலும்  உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார்.போடி தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எம்எல்ஏவாக பதவியேற்றார்.சான்றிதழ் கொண்டு வராததன் காரணமாக அமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement