கிண்ணியா கல்வி வலயத்தின் குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலய தரமுயர்வுத் திகதியை முற்படுத்தி வழங்குமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் செயலாளருக்கு இன்று(18)அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாயலத்தில் க.பொ.த (உ.த) விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிப்பதற்கு தங்களால் அனுமதி வழங்கப்பட்டமை குறித்து முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பாடசாலை தரமுயர்வு தொடர்பில் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனது சிபார்சும் வழங்கப் பட்டமை தொடர்பில் நான் மிகவும் திருப்தி அடைகின்றேன்.
இதன் மூலம் குறிஞ்சாக்கேணி கல்விக் கோட்டத்தில் உயர்தர விஞ்ஞானப் பிரிவு பாடசாலை இல்லை என்ற குறை தீர்க்கப்பட்டுள்ளது.
இப்பாடசாலையில் உயர்தர விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிப்பதற்கான விண்ணப்பம் இவ்வாண்டு முற்பகுதியில் சமர்ப்பிக்கப் பட்டது. விண்ணப்பம் கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தினால் சிபார்சு செய்து அனுப்பப்பட்டதைக் கருத்தில் கொண்டும், மாகாணக் கல்வித் திணைக்களத்திலிருந்து விண்ணப்பம் நிராகரிப்பு தொடர்பாக பதில் ஏதும் வராததைக் கருத்தில் கொண்டும் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இப்பாடசாலையில் இவ்வாண்டு உயர்தர விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிக்கப் பட்டுள்ளது. பாடங்களும் திருப்திகரமாக நடைபெறுகின்றன.
எனினும், தற்போது புதிய வகுப்பு 2026 முதல் ஆரம்பிப்பதற்கான அனுமதியே வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது இங்கு கல்வி கற்கும் மாணவிகள் 2027 இல் உயர்தர பரீட்சைக்குத் தோற்ற முடியாத நிலை உள்ளது. இதனால் இம்மாணவிகள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.
விண்ணப்பத்தை சிபார்சு செய்து அனுப்புவதில் கல்வி அலுவலகங்களில் ஏற்பட்ட தாமதமே இதற்கு காரணமாகும். எனவே, தயவு செய்த இந்த விடயங்களைக் கருத்தில் வழங்கப் பட்டுள்ள இந்த தரமுயர்வு அனுமதியை 2025க்கு முற்படுத்தி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலய தரமுயர்வுத் திகதியை முற்படுத்தி வழங்க இம்ரான் எம்.பி கோரிக்கை கிண்ணியா கல்வி வலயத்தின் குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலய தரமுயர்வுத் திகதியை முற்படுத்தி வழங்குமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பில் செயலாளருக்கு இன்று(18)அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாயலத்தில் க.பொ.த (உ.த) விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிப்பதற்கு தங்களால் அனுமதி வழங்கப்பட்டமை குறித்து முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பாடசாலை தரமுயர்வு தொடர்பில் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனது சிபார்சும் வழங்கப் பட்டமை தொடர்பில் நான் மிகவும் திருப்தி அடைகின்றேன்.இதன் மூலம் குறிஞ்சாக்கேணி கல்விக் கோட்டத்தில் உயர்தர விஞ்ஞானப் பிரிவு பாடசாலை இல்லை என்ற குறை தீர்க்கப்பட்டுள்ளது. இப்பாடசாலையில் உயர்தர விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிப்பதற்கான விண்ணப்பம் இவ்வாண்டு முற்பகுதியில் சமர்ப்பிக்கப் பட்டது. விண்ணப்பம் கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தினால் சிபார்சு செய்து அனுப்பப்பட்டதைக் கருத்தில் கொண்டும், மாகாணக் கல்வித் திணைக்களத்திலிருந்து விண்ணப்பம் நிராகரிப்பு தொடர்பாக பதில் ஏதும் வராததைக் கருத்தில் கொண்டும் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இப்பாடசாலையில் இவ்வாண்டு உயர்தர விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிக்கப் பட்டுள்ளது. பாடங்களும் திருப்திகரமாக நடைபெறுகின்றன.எனினும், தற்போது புதிய வகுப்பு 2026 முதல் ஆரம்பிப்பதற்கான அனுமதியே வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது இங்கு கல்வி கற்கும் மாணவிகள் 2027 இல் உயர்தர பரீட்சைக்குத் தோற்ற முடியாத நிலை உள்ளது. இதனால் இம்மாணவிகள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.விண்ணப்பத்தை சிபார்சு செய்து அனுப்புவதில் கல்வி அலுவலகங்களில் ஏற்பட்ட தாமதமே இதற்கு காரணமாகும். எனவே, தயவு செய்த இந்த விடயங்களைக் கருத்தில் வழங்கப் பட்டுள்ள இந்த தரமுயர்வு அனுமதியை 2025க்கு முற்படுத்தி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.