நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருள் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் சூழலில், பொது அமைதியைப் பேணுமாறு இலங்கை பொலிஸார் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எரிபொருள் நிலைய ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவும்.
வரிசைகளை மீறிச் செல்ல முயற்சிப்பதோ அல்லது ஏனையவர்களின் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் அல்லது வன்முறையில் ஈடுபடுபவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
எரிபொருள் வரிசைகளில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் உடனடிக் கைது - பொலிஸார் எச்சரிக்கை நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருள் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் சூழலில், பொது அமைதியைப் பேணுமாறு இலங்கை பொலிஸார் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.எரிபொருள் நிலைய ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவும்.வரிசைகளை மீறிச் செல்ல முயற்சிப்பதோ அல்லது ஏனையவர்களின் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் அல்லது வன்முறையில் ஈடுபடுபவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.