மொனராகலை - பிபில, ரதலியத்த பிரதேசத்தில் நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவரைக் கொலை செய்துள்ளார்.
நேற்று (28) பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபரும் தனது கழுத்தை வெட்டிக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரதலியத்த - பிபில பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கள்ளக்காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதன் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரும் தற்போது பொலிஸ் பாதுகாப்பின்கீழ் பிபில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் பிபில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்காதலால் விபரீதம்; பெண் படுகொலை கழுத்தை வெட்டி விபரீத முடிவெடுத்த சந்தேகநபர் மொனராகலை - பிபில, ரதலியத்த பிரதேசத்தில் நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவரைக் கொலை செய்துள்ளார். நேற்று (28) பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபரும் தனது கழுத்தை வெட்டிக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரதலியத்த - பிபில பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கள்ளக்காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதன் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரும் தற்போது பொலிஸ் பாதுகாப்பின்கீழ் பிபில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் பிபில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.