சட்டவிரோதமாக பண வைப்புகளை ஏற்றுக்கொண்டமை மற்றும் நிதித் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் 6 நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பணிப்பாளர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிதிகளை முடக்குவதற்கு இலங்கை மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.
2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 44ஆம் பிரிவின் கீழ் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த உத்தரவுகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றின் காலவரம்பும் நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதில் இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக நிதிச் சட்டத்தின் 42ஆம் பிரிவின் கீழ் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஏனைய 4 நிறுவனங்களும் நிதிச் சட்டத்தின் 2ஆம் பிரிவை மீறி சட்டவிரோதமாக நிதித் தொழிலை மேற்கொண்டதுடன், பொதுமக்களிடம் இருந்து பண வைப்புகளை ஏற்றுக்கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் தமது பணத்தை வங்கிகள் அல்லது நிதிச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற அல்லது முறையாக அனுமதி வழங்கப்பட்ட சட்டப்பூர்வ நிறுவனங்களில் மாத்திரம் வைப்புச் செய்யுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
சட்டவிரோத நிதி நடவடிக்கை: 6 நிறுவனங்களுக்கு எதிராக மத்திய வங்கி அதிரடி நடவடிக்கை சட்டவிரோதமாக பண வைப்புகளை ஏற்றுக்கொண்டமை மற்றும் நிதித் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் 6 நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பணிப்பாளர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிதிகளை முடக்குவதற்கு இலங்கை மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 44ஆம் பிரிவின் கீழ் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.குறித்த உத்தரவுகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றின் காலவரம்பும் நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இதில் இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக நிதிச் சட்டத்தின் 42ஆம் பிரிவின் கீழ் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ஏனைய 4 நிறுவனங்களும் நிதிச் சட்டத்தின் 2ஆம் பிரிவை மீறி சட்டவிரோதமாக நிதித் தொழிலை மேற்கொண்டதுடன், பொதுமக்களிடம் இருந்து பண வைப்புகளை ஏற்றுக்கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் தமது பணத்தை வங்கிகள் அல்லது நிதிச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற அல்லது முறையாக அனுமதி வழங்கப்பட்ட சட்டப்பூர்வ நிறுவனங்களில் மாத்திரம் வைப்புச் செய்யுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.