• Apr 30 2025

கல்முனை கிரீன் பீல்ட் முகைதீன் பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு

Thansita / Mar 17th 2025, 9:33 pm
image

கல்முனை கிரீன் பீல்ட் முகைதீன் பள்ளிவாசலில் இன்று (17)ம் திகதி இப்தார் நிகழ்வு இடம்பெற்றது

இந்நிகழ்வில் கல்முனை முன்னாள் மாநகர பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர்  இவ் இப்தார் சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.

மேலும் இவ் இப்தார் நிகழ்வில் எகிப்து நாட்டை சேர்ந்த முஹம்மட் அதீக் விஷேட அதிதியாக கலந்து கொண்டதுடன் கல்முனை கிரீன் பீல்ட் முகைதீன் பள்ளிவாசலில் முதன்முதலாக அல்குர் ஆன் மத்ரஸா ஒன்றினை கெளரவ ரஹ்மத் மன்சூர் கடந்த வருடம் ஆரம்பித்து வைத்தார் 

இதில் முதன்முதலாக அல்குர் ஆனை முழுமையாக பாராயணம் செய்த மூன்று மாணவர்களுக்கு இவ்  இப்தார் நிகழ்வில் பாராட்டி சான்றிதழும்  வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் உலமாக்கள், பள்ளிவாசல் நிருவாகத்தினர் மற்றும் ரஹ்மத் பவுண்டேசன் முக்கியஸ்தர்கள்,  பிரதேசவாசிகள்  என பலரும் கலந்து கொண்டனர்.

கல்முனை கிரீன் பீல்ட் முகைதீன் பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு கல்முனை கிரீன் பீல்ட் முகைதீன் பள்ளிவாசலில் இன்று (17)ம் திகதி இப்தார் நிகழ்வு இடம்பெற்றதுஇந்நிகழ்வில் கல்முனை முன்னாள் மாநகர பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர்  இவ் இப்தார் சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.மேலும் இவ் இப்தார் நிகழ்வில் எகிப்து நாட்டை சேர்ந்த முஹம்மட் அதீக் விஷேட அதிதியாக கலந்து கொண்டதுடன் கல்முனை கிரீன் பீல்ட் முகைதீன் பள்ளிவாசலில் முதன்முதலாக அல்குர் ஆன் மத்ரஸா ஒன்றினை கெளரவ ரஹ்மத் மன்சூர் கடந்த வருடம் ஆரம்பித்து வைத்தார் இதில் முதன்முதலாக அல்குர் ஆனை முழுமையாக பாராயணம் செய்த மூன்று மாணவர்களுக்கு இவ்  இப்தார் நிகழ்வில் பாராட்டி சான்றிதழும்  வழங்கி வைக்கப்பட்டது.மேலும் இந்நிகழ்வில் உலமாக்கள், பள்ளிவாசல் நிருவாகத்தினர் மற்றும் ரஹ்மத் பவுண்டேசன் முக்கியஸ்தர்கள்,  பிரதேசவாசிகள்  என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement