பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் அல்லது மோசடிகள் குறித்து பொதுமக்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 என்ற துரித இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.
புத்தாண்டு காலப்பகுதியில் நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தடுப்பதற்கு, வார இறுதி நாட்களிலும் முற்றுகைகளை முன்னெடுக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை தீர்மானித்துள்ளது என பதில் பணிப்பாளர் சமந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, வார இறுதி நாட்களிலும் சந்தை விலைகளை கண்காணிப்பதற்கு, விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்புகளுக்காக 350 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள், பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றதா என்பதைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நாடு முழுவதும் சுமார் 06 ஆயிரம் முற்றுகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொருட்களை அதிக விலைக்கு விற்றால் முறையிட துரித தொலைபேசி இலக்கம் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் அல்லது மோசடிகள் குறித்து பொதுமக்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 என்ற துரித இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.புத்தாண்டு காலப்பகுதியில் நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தடுப்பதற்கு, வார இறுதி நாட்களிலும் முற்றுகைகளை முன்னெடுக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை தீர்மானித்துள்ளது என பதில் பணிப்பாளர் சமந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார்.அதன்படி, வார இறுதி நாட்களிலும் சந்தை விலைகளை கண்காணிப்பதற்கு, விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்புகளுக்காக 350 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள், பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றதா என்பதைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நாடு முழுவதும் சுமார் 06 ஆயிரம் முற்றுகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.