டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனம், தனது விமானப் பணியாளர்களுக்கான உடற்தகுதி மற்றும் ஆரோக்கிய விதிகளைக் கொண்டு வந்துள்ளது.
வரும் மே 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய புதிய கேபின் குரூ ஹெல்த் அண்ட் ஃபிட்னஸ் காம்ப்ளையன்ஸ் பாலிசி (Cabin Crew Health and Fitness Compliance Policy) ஊழியர்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
புதிய விதிகளின்படி, பணியாளர்களின் உடல் நிறை குறியீட்டெண் (BMI) அளவே அவர்களின் பணியைத் தீர்மானிக்கிறது.
சாதாரண நிலை (18.5 - 24.9): இவர்கள் மட்டுமே தகுதியானவர்களாகக் கருதப்பட்டுப் பணி வழங்கப்படுவர்.
குறைந்த/அதிக எடை (18-க்கு கீழ் அல்லது 25 - 29.9): இவர்கள் தற்காலிகமாகப் பணியிலிருந்து நீக்கப்படுவர்.
மருத்துவ மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மீண்டும் அனுமதிக்கப்படுவர்.
அதுவரை சம்பளம் வழங்கப்படாது.
உடல் பருமன் (30 அல்லது அதற்கு மேல்): இவர்கள் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்,ஊதியமில்லா விடுப்பில் வைக்கப்படுவர்.
உடல் பருமன் பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு எடையைக் குறைக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
30 நாட்களுக்குப் பிறகு முறையான எச்சரிக்கை கடிதம் வழங்கப்படும்.
அடுத்த 30 நாட்களிலும் தகுதியை எட்டத் தவறினால் இறுதி எச்சரிக்கை விடுக்கப்படும், மேலதிக ஒழுங்கு நடவடிக்கைகள் (பணிநீக்கம் உட்பட) எடுக்கப்படும்.
இப்பிரிவில் உள்ளவர்கள் 7 நாட்களுக்குள் இரத்தச் சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்து பரிசோதனைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.
பழைய பணியாளர்கள் மற்றும் தற்போது பயிற்சியில் இருக்கும் புதிய ஊழியர்கள் என அனைவருக்கும் இந்தப் புதிய விதிகள் பொருந்தும்.
விமானப் பயணத்தின் போது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவசர காலங்களில் ஊழியர்கள் சுறுசுறுப்பாகச் செயல்படுவதை உறுதிப்படுத்தவுமே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குண்டாக இருந்தால் வேலை காலி'-ஏர் இந்தியா ஊழியர்களுக்குப் புதிய சிக்கல் டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனம், தனது விமானப் பணியாளர்களுக்கான உடற்தகுதி மற்றும் ஆரோக்கிய விதிகளைக் கொண்டு வந்துள்ளது.வரும் மே 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய புதிய கேபின் குரூ ஹெல்த் அண்ட் ஃபிட்னஸ் காம்ப்ளையன்ஸ் பாலிசி (Cabin Crew Health and Fitness Compliance Policy) ஊழியர்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.புதிய விதிகளின்படி, பணியாளர்களின் உடல் நிறை குறியீட்டெண் (BMI) அளவே அவர்களின் பணியைத் தீர்மானிக்கிறது.சாதாரண நிலை (18.5 - 24.9): இவர்கள் மட்டுமே தகுதியானவர்களாகக் கருதப்பட்டுப் பணி வழங்கப்படுவர்.குறைந்த/அதிக எடை (18-க்கு கீழ் அல்லது 25 - 29.9): இவர்கள் தற்காலிகமாகப் பணியிலிருந்து நீக்கப்படுவர். மருத்துவ மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மீண்டும் அனுமதிக்கப்படுவர். அதுவரை சம்பளம் வழங்கப்படாது.உடல் பருமன் (30 அல்லது அதற்கு மேல்): இவர்கள் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்,ஊதியமில்லா விடுப்பில் வைக்கப்படுவர்.உடல் பருமன் பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு எடையைக் குறைக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.30 நாட்களுக்குப் பிறகு முறையான எச்சரிக்கை கடிதம் வழங்கப்படும்.அடுத்த 30 நாட்களிலும் தகுதியை எட்டத் தவறினால் இறுதி எச்சரிக்கை விடுக்கப்படும், மேலதிக ஒழுங்கு நடவடிக்கைகள் (பணிநீக்கம் உட்பட) எடுக்கப்படும்.இப்பிரிவில் உள்ளவர்கள் 7 நாட்களுக்குள் இரத்தச் சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்து பரிசோதனைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. பழைய பணியாளர்கள் மற்றும் தற்போது பயிற்சியில் இருக்கும் புதிய ஊழியர்கள் என அனைவருக்கும் இந்தப் புதிய விதிகள் பொருந்தும். விமானப் பயணத்தின் போது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவசர காலங்களில் ஊழியர்கள் சுறுசுறுப்பாகச் செயல்படுவதை உறுதிப்படுத்தவுமே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.