• Jun 25 2026

மாணவர் பாதுகாப்பில் அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை: அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் எச்சரிக்கை

Chithra / Jun 24th 2026, 10:41 am
image


பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், பாலியல் துன்புறுத்தல் அல்லது துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கும்போது உடனடியாக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் பாடசாலை அதிபர்களின் முழுமையான பொறுப்பாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ வலியுறுத்தியுள்ளார்.


அம்பலாந்தோட்டை பகுதியிலுள்ள தேசிய பாடசாலை ஒன்றின் அதிபர் மற்றும் உப அதிபர், மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சம்பவத்தை மூடிமறைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விசேட அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.


மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான தெளிவான பொறுப்புகள் பாடசாலை அதிபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகள் முறையாக அமுல்படுத்தப்படுவதை உறுதி செய்வதும் அவர்களின் கடமையாகும்.


மேலும், பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பான 12/2016 ஆம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம், மாணவர்கள் உடல் மற்றும் உளவியல் ரீதியான எந்தவொரு பாதிப்பிற்கும் உள்ளாகாத சூழலை உருவாக்குவது பாடசாலை நிர்வாகத்தின் பொறுப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், அனைத்து பாடசாலைகளிலும் “பாடசாலை சிறுவர் பாதுகாப்புக் குழுக்கள்” கட்டாயமாக அமைக்கப்பட வேண்டும் என்றும், அவற்றின் ஊடாக மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு, கிடைக்கும் முறைப்பாடுகளுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.


மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் எந்தவித அலட்சியமும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், பொறுப்புகளை புறக்கணிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மாணவர் பாதுகாப்பில் அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை: அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் எச்சரிக்கை பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், பாலியல் துன்புறுத்தல் அல்லது துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கும்போது உடனடியாக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் பாடசாலை அதிபர்களின் முழுமையான பொறுப்பாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ வலியுறுத்தியுள்ளார்.அம்பலாந்தோட்டை பகுதியிலுள்ள தேசிய பாடசாலை ஒன்றின் அதிபர் மற்றும் உப அதிபர், மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சம்பவத்தை மூடிமறைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விசேட அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான தெளிவான பொறுப்புகள் பாடசாலை அதிபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகள் முறையாக அமுல்படுத்தப்படுவதை உறுதி செய்வதும் அவர்களின் கடமையாகும்.மேலும், பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பான 12/2016 ஆம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம், மாணவர்கள் உடல் மற்றும் உளவியல் ரீதியான எந்தவொரு பாதிப்பிற்கும் உள்ளாகாத சூழலை உருவாக்குவது பாடசாலை நிர்வாகத்தின் பொறுப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், அனைத்து பாடசாலைகளிலும் “பாடசாலை சிறுவர் பாதுகாப்புக் குழுக்கள்” கட்டாயமாக அமைக்கப்பட வேண்டும் என்றும், அவற்றின் ஊடாக மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு, கிடைக்கும் முறைப்பாடுகளுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் எந்தவித அலட்சியமும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், பொறுப்புகளை புறக்கணிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement