• May 18 2026

அநுர ஆட்சி தொடர்ந்தால் நாடு மீண்டெழ முடியாத பாதாளத்துக்குச் செல்லும் - திலித் ஜயவீர எச்சரிக்கை

Chithra / May 17th 2026, 11:42 am
image

அநுர அரசிடம் முறையான பொருளாதாரத் திட்டங்கள் இல்லாததால் நாட்டு மக்கள் மிக வேகமாக வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். இந்த ஆட்சி தொடர்ந்தால், நாடு மீண்டெழ முடியாத பாதாளத்துக்குச் சென்றுவிடும் என சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,


கடந்த ஒன்றரை வருடங்களாக நாட்டின் பொருளாதாரம் எவ்வித வளர்ச்சியும் அடையவில்லை. அரசு மூலதனச் செலவுகளைக் கடுமையாகக் குறைத்துள்ளதால், சந்தையில் பணப்புழக்கம் அற்றுப் போய் பொருளாதாரம் மேலும் சுருங்கி வருகின்றது.


இளைஞர்களுக்கு மலிவு விலையில் வாகனங்களைத் தருவோம் எனக் கூறிவிட்டு, விலையுயர்ந்த வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதித்ததன் மூலம் டொலர் கையிருப்பு வீணடிக்கப்பட்டுள்ளது.


இதன் விளைவாக டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் சரிந்து வருகின்றது. இது உற்பத்தி மற்றும் நுகர்வுத் துறையைப் பாரிய அளவில் பாதித்துள்ளது.


அரச ஊழியர்களின் சம்பளத்துக்கு நிகராக மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளது. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்றனர்.


அரசு சர்வதேச நாணய நிதியம் போன்ற வெளிநாட்டு சக்திகளின் ஆலோசனைகளை மட்டுமே கேட்டுச் செயற்படுகின்றது. கடன் கொடுத்தவர்களைத் திருப்திப்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் இந்த அரசு, நாட்டு மக்களின் வாழ்வாதாரம் குறித்துச் சிந்திப்பதில்லை.


முறையான பொருளாதாரத் தத்துவமோ அல்லது மூலோபாயத் திட்டமோ இல்லாத இந்த ஆட்சி தொடர்ந்தால், நாடு மீண்டெழ முடியாத பாதாளத்துக்குச் சென்றுவிடும்." - என்றார்.


அநுர ஆட்சி தொடர்ந்தால் நாடு மீண்டெழ முடியாத பாதாளத்துக்குச் செல்லும் - திலித் ஜயவீர எச்சரிக்கை அநுர அரசிடம் முறையான பொருளாதாரத் திட்டங்கள் இல்லாததால் நாட்டு மக்கள் மிக வேகமாக வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். இந்த ஆட்சி தொடர்ந்தால், நாடு மீண்டெழ முடியாத பாதாளத்துக்குச் சென்றுவிடும் என சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த ஒன்றரை வருடங்களாக நாட்டின் பொருளாதாரம் எவ்வித வளர்ச்சியும் அடையவில்லை. அரசு மூலதனச் செலவுகளைக் கடுமையாகக் குறைத்துள்ளதால், சந்தையில் பணப்புழக்கம் அற்றுப் போய் பொருளாதாரம் மேலும் சுருங்கி வருகின்றது.இளைஞர்களுக்கு மலிவு விலையில் வாகனங்களைத் தருவோம் எனக் கூறிவிட்டு, விலையுயர்ந்த வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதித்ததன் மூலம் டொலர் கையிருப்பு வீணடிக்கப்பட்டுள்ளது.இதன் விளைவாக டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் சரிந்து வருகின்றது. இது உற்பத்தி மற்றும் நுகர்வுத் துறையைப் பாரிய அளவில் பாதித்துள்ளது.அரச ஊழியர்களின் சம்பளத்துக்கு நிகராக மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளது. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்றனர்.அரசு சர்வதேச நாணய நிதியம் போன்ற வெளிநாட்டு சக்திகளின் ஆலோசனைகளை மட்டுமே கேட்டுச் செயற்படுகின்றது. கடன் கொடுத்தவர்களைத் திருப்திப்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் இந்த அரசு, நாட்டு மக்களின் வாழ்வாதாரம் குறித்துச் சிந்திப்பதில்லை.முறையான பொருளாதாரத் தத்துவமோ அல்லது மூலோபாயத் திட்டமோ இல்லாத இந்த ஆட்சி தொடர்ந்தால், நாடு மீண்டெழ முடியாத பாதாளத்துக்குச் சென்றுவிடும்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement