• Apr 21 2026

7வது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் - நலன் விசாரித்த சஜித், விமல் வீரவன்ச

Chithra / Feb 1st 2026, 3:46 pm
image


7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தங்களை உடனடியாக ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு கோரி, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று (01) 7-வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது. 


முதலில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நால்வரும் உடல்நிலை பாதிக்கப்பட்டமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலும் இருவர் நேற்று (31) சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்துகொண்டனர். 


இதற்கிடையில், இன்று முற்பகல் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச  அந்த இடத்திற்கு வருகை தந்தார். 


அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த விமல் வீரவன்ச, 


இவர்களுக்கு நீதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு அரசாங்கத்திற்கு இவ்வாறான கடுமையான எதிர்வினையாற்ற உரிமை இருந்தாலும், இந்த அரசாங்கத்திற்குத் தார்மீக உரிமை இல்லை. காரணம், இவர்கள் அன்று இந்தக் கோஷங்களை உயரிய அளவில் ஏற்றுக்கொண்டவர்கள். அவற்றை நிறைவேற்றுவோம் என்று நம்பிக்கையை அளவுக்கு அதிகமாகக் கொடுத்தவர்கள்." என்று தெரிவித்தார். 


இதேவேளை உண்ணாவிரதப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (01) இரண்டாவது நாளாகவும் கலந்து கொண்டார். 


5 முதல் 10 வருடங்கள் பிள்ளைகளுக்குக் கற்பித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆசிரியர் சேவையில் இணைய உரிமையில்லையா? ஏன் அவர்களுக்கு ஆசிரியர் சேவையில் இணையத் தடை விதிக்கப்பட்டுள்ளது? மிகவும் தெளிவான தீர்வொன்று உள்ளது. 


அரசாங்கத்திற்கும் இந்தத் தீர்வு தெரியும். ஆனால், தற்போதைக்கு அரசாங்கம் உறுதியளித்ததை நிறைவேற்றாமல் இந்தப் பிரச்சினையிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறது. 


ஏன் இவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார்கள்? அரசாங்கம் பொய் சொன்னதால்தானே. இந்த ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாம் எப்போதும் இவர்களுடன் இருப்போம் என இதன்போது தெரிவித்தார். 

7வது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் - நலன் விசாரித்த சஜித், விமல் வீரவன்ச 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தங்களை உடனடியாக ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு கோரி, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று (01) 7-வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது. முதலில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நால்வரும் உடல்நிலை பாதிக்கப்பட்டமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலும் இருவர் நேற்று (31) சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்துகொண்டனர். இதற்கிடையில், இன்று முற்பகல் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச  அந்த இடத்திற்கு வருகை தந்தார். அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த விமல் வீரவன்ச, இவர்களுக்கு நீதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு அரசாங்கத்திற்கு இவ்வாறான கடுமையான எதிர்வினையாற்ற உரிமை இருந்தாலும், இந்த அரசாங்கத்திற்குத் தார்மீக உரிமை இல்லை. காரணம், இவர்கள் அன்று இந்தக் கோஷங்களை உயரிய அளவில் ஏற்றுக்கொண்டவர்கள். அவற்றை நிறைவேற்றுவோம் என்று நம்பிக்கையை அளவுக்கு அதிகமாகக் கொடுத்தவர்கள்." என்று தெரிவித்தார். இதேவேளை உண்ணாவிரதப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (01) இரண்டாவது நாளாகவும் கலந்து கொண்டார். 5 முதல் 10 வருடங்கள் பிள்ளைகளுக்குக் கற்பித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆசிரியர் சேவையில் இணைய உரிமையில்லையா ஏன் அவர்களுக்கு ஆசிரியர் சேவையில் இணையத் தடை விதிக்கப்பட்டுள்ளது மிகவும் தெளிவான தீர்வொன்று உள்ளது. அரசாங்கத்திற்கும் இந்தத் தீர்வு தெரியும். ஆனால், தற்போதைக்கு அரசாங்கம் உறுதியளித்ததை நிறைவேற்றாமல் இந்தப் பிரச்சினையிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறது. ஏன் இவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார்கள் அரசாங்கம் பொய் சொன்னதால்தானே. இந்த ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாம் எப்போதும் இவர்களுடன் இருப்போம் என இதன்போது தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement