• Apr 15 2026

இன்றும் முடங்கிய வைத்தியசாலைகள் - ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நோயாளர்கள்

Chithra / Apr 10th 2026, 12:17 pm
image

திருகோணமலை - தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று வெள்ளிக்கிழமை (10) 2வது நாளாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். 


இதன் காரணமாக தூரப் பகுதிகளிலிருந்து வைத்திய சேவை பெறுவதற்காக வந்த நோயாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


தமது வேலைகளை விட்டுவிட்டு, பிரயாண கஷ்டங்களுக்கு மத்தியில் வைத்திய சேவை பெறுவதற்காக வருகை தந்தால் இங்கு வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


இதன் காரணமாக தாம் அசௌரியங்களை எதிர்நோக்கியதாக வைத்திய சேவை பெறுவதற்காக வருகை தந்த நோயாளவர்கள் கவலை தெரிவித்தனர்.


எனவே இது விடயத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வினை பெற்று தர வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று (09) காலை 8:00 மணி முதல் 48 மணித்தியால பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்


இன்றும் முடங்கிய வைத்தியசாலைகள் - ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நோயாளர்கள் திருகோணமலை - தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று வெள்ளிக்கிழமை (10) 2வது நாளாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தூரப் பகுதிகளிலிருந்து வைத்திய சேவை பெறுவதற்காக வந்த நோயாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.தமது வேலைகளை விட்டுவிட்டு, பிரயாண கஷ்டங்களுக்கு மத்தியில் வைத்திய சேவை பெறுவதற்காக வருகை தந்தால் இங்கு வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக தாம் அசௌரியங்களை எதிர்நோக்கியதாக வைத்திய சேவை பெறுவதற்காக வருகை தந்த நோயாளவர்கள் கவலை தெரிவித்தனர்.எனவே இது விடயத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வினை பெற்று தர வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று (09) காலை 8:00 மணி முதல் 48 மணித்தியால பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement