கொழும்பு – தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலைவத்துகொட, பன்னிபிட்டிய வீதியில் அமைந்துள்ள விமான பயணச்சீட்டு மற்றும் விசா வழங்கும் நிறுவனமொன்றில் நேற்று (01) மாலை பாரிய கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெள்ளை நிற ஆல்டோ ரக காரில் வந்த நான்கு பேர் கொண்ட ஆயுதம் ஏந்திய குழுவினர், மாலை சுமார் 6 மணியளவில் நிறுவனத்துக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
அங்கு நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் சில ஊழியர்கள் இருந்த நிலையில், சந்தேகநபர்கள் கத்திகள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களைக் காட்டி அவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.
இதன்போது, நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 6 கோடி ரூபா ரொக்கப் பணத்தையும்,
நிறுவன உரிமையாளர் அணிந்திருந்த 4 தங்கச் சங்கிலிகள் மற்றும் 3 தங்க மோதிரங்களையும் கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் தாங்கள் வந்த அதே காரில் பன்னிபிட்டிய திசையை நோக்கி தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபர்களையும் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் காரையும் கண்டுபிடித்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் பட்டப்பகலில் பயங்கரம் – 6 கோடி ரூபாய் பணம், தங்க நகைகள் கொள்ளை கொழும்பு – தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலைவத்துகொட, பன்னிபிட்டிய வீதியில் அமைந்துள்ள விமான பயணச்சீட்டு மற்றும் விசா வழங்கும் நிறுவனமொன்றில் நேற்று (01) மாலை பாரிய கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.வெள்ளை நிற ஆல்டோ ரக காரில் வந்த நான்கு பேர் கொண்ட ஆயுதம் ஏந்திய குழுவினர், மாலை சுமார் 6 மணியளவில் நிறுவனத்துக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.அங்கு நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் சில ஊழியர்கள் இருந்த நிலையில், சந்தேகநபர்கள் கத்திகள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களைக் காட்டி அவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.இதன்போது, நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 6 கோடி ரூபா ரொக்கப் பணத்தையும், நிறுவன உரிமையாளர் அணிந்திருந்த 4 தங்கச் சங்கிலிகள் மற்றும் 3 தங்க மோதிரங்களையும் கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் தாங்கள் வந்த அதே காரில் பன்னிபிட்டிய திசையை நோக்கி தப்பிச் சென்றுள்ளனர்.சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபர்களையும் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் காரையும் கண்டுபிடித்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.