• May 05 2026

முல்லைத்தீவு பாலிநகர் மகாவித்தியாலயத்தில் கௌரவிப்பு நிகழ்வு!

Ziya / May 4th 2026, 3:06 pm
image

நினைவழியா தோழமைகளின் நினைவேந்தலும், அவர்களின் பிள்ளைகள் மற்றும் ஆசான்களை கௌரவிக்கும் நிகழ்வும் முல்லைத்தீவு பாலிநகர் மகாவித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நேற்றையதினம் (04) மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.


2003 ஆம் ஆண்டு கல்வி பயின்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். 


இந்த ஆண்டிற்கான நிகழ்வில், தங்களது தோழமைகளின் பிள்ளைகளில் கல்வியில் சிறந்து விளங்கிய 17 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


குறிப்பாக, 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் உயர்ந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்கள், க.பொ.த உயர்தரத்தில் சிறந்த சாதனைகள் படைத்தவர்கள், மேலும் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்ற மாணவர் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை பெற்றவர்கள் பாராட்டப்பட்டனர்.


இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக பாடசாலையின் முதல்வர் தர்மலிங்கம் ஶ்ரீகமலநாதன் கலந்து கொண்டதுடன், 2003ஆம் ஆண்டு மாணவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர். மேலும் 2003 பிரிவு நண்பர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


இந்த நிகழ்வு, பழைய நட்புகளை நினைவுகூரும் வகையிலும், அடுத்த தலைமுறையின் கல்விச் சாதனைகளை ஊக்குவிக்கும் வகையிலும் அர்த்தமுள்ளதாக அமைந்தது.

முல்லைத்தீவு பாலிநகர் மகாவித்தியாலயத்தில் கௌரவிப்பு நிகழ்வு நினைவழியா தோழமைகளின் நினைவேந்தலும், அவர்களின் பிள்ளைகள் மற்றும் ஆசான்களை கௌரவிக்கும் நிகழ்வும் முல்லைத்தீவு பாலிநகர் மகாவித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நேற்றையதினம் (04) மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.2003 ஆம் ஆண்டு கல்வி பயின்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த ஆண்டிற்கான நிகழ்வில், தங்களது தோழமைகளின் பிள்ளைகளில் கல்வியில் சிறந்து விளங்கிய 17 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.குறிப்பாக, 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் உயர்ந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்கள், க.பொ.த உயர்தரத்தில் சிறந்த சாதனைகள் படைத்தவர்கள், மேலும் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்ற மாணவர் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை பெற்றவர்கள் பாராட்டப்பட்டனர்.இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக பாடசாலையின் முதல்வர் தர்மலிங்கம் ஶ்ரீகமலநாதன் கலந்து கொண்டதுடன், 2003ஆம் ஆண்டு மாணவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர். மேலும் 2003 பிரிவு நண்பர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.இந்த நிகழ்வு, பழைய நட்புகளை நினைவுகூரும் வகையிலும், அடுத்த தலைமுறையின் கல்விச் சாதனைகளை ஊக்குவிக்கும் வகையிலும் அர்த்தமுள்ளதாக அமைந்தது.

Advertisement

Advertisement

Advertisement