• May 24 2026

பலத்த காற்றுடன் கூடிய கடும் மழை - யாழில் இரு குடும்பங்கள் பாதிப்பு!

Chithra / Oct 24th 2025, 3:22 pm
image

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று  பகல் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்தது. எனினும் காற்று காரணமாக பெரியளவான பாதிப்புக்கள் ஏற்படவில்லை.

அதேவேளை கடும் காற்றுக் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், வெருகல், தோப்பூர், பாட்டாளிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்சார தடை ஏற்பட்டிருந்தது. 

இதேவேளை நிலவும் மழையுடன் கூடிய காற்று காரணமாக யாழில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த அறுவர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/45 கிராம சேவகர் பிரிவில் பலத்த காற்று காரணமாக ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் இரண்டு குடும்பங்களை சேர்ந்த அறுவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


பலத்த காற்றுடன் கூடிய கடும் மழை - யாழில் இரு குடும்பங்கள் பாதிப்பு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று  பகல் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்தது. எனினும் காற்று காரணமாக பெரியளவான பாதிப்புக்கள் ஏற்படவில்லை.அதேவேளை கடும் காற்றுக் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், வெருகல், தோப்பூர், பாட்டாளிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்சார தடை ஏற்பட்டிருந்தது. இதேவேளை நிலவும் மழையுடன் கூடிய காற்று காரணமாக யாழில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த அறுவர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.அந்தவகையில் காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/45 கிராம சேவகர் பிரிவில் பலத்த காற்று காரணமாக ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் இரண்டு குடும்பங்களை சேர்ந்த அறுவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement