• Apr 22 2026

யாழில் கொட்டித்தீர்த்த மழை; மண்வாசனையுடன் குளிர்ந்த மக்கள்!

shanu / Apr 21st 2026, 5:55 pm
image


யாழ்ப்பாணத்தில் சற்றுமுன்னர் பலத்த மழை கொட்டித் தீர்த்துள்ளது. 


நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வானிலை அறிக்கையில் தெரிவித்திருந்தது. 


அத்துடன் வடக்கு, மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும்  காலி , மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய  பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்திருந்தது. 


இந்த நிலையில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் சற்றுமுன்னர் மழை கொட்டித்தீர்த்துள்ளது. 


வெப்பத்தின் கொடூரத்தால் வெளியே தலை காட்ட முடியாமல் இருந்த மக்களுக்கு விருந்தாக மழை கொட்டியுள்ளது. 


அதாவது உச்சக்கட்ட வெப்பத்தைத் தணித்து ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மழை பெய்து மக்களைக் குளிர வைத்துள்ளது. 


வெள்ளம் பாயும் அளவில் மழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

யாழில் கொட்டித்தீர்த்த மழை; மண்வாசனையுடன் குளிர்ந்த மக்கள் யாழ்ப்பாணத்தில் சற்றுமுன்னர் பலத்த மழை கொட்டித் தீர்த்துள்ளது. நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வானிலை அறிக்கையில் தெரிவித்திருந்தது. அத்துடன் வடக்கு, மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும்  காலி , மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய  பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் சற்றுமுன்னர் மழை கொட்டித்தீர்த்துள்ளது. வெப்பத்தின் கொடூரத்தால் வெளியே தலை காட்ட முடியாமல் இருந்த மக்களுக்கு விருந்தாக மழை கொட்டியுள்ளது. அதாவது உச்சக்கட்ட வெப்பத்தைத் தணித்து ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மழை பெய்து மக்களைக் குளிர வைத்துள்ளது. வெள்ளம் பாயும் அளவில் மழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement