நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
இந்நிலையில் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் மூன்று பேர் உயிரிழந்தனர்.
பேராதனை, ருவன்வெல்ல மற்றும் தம்புத்தேகம ஆகிய பகுதிகளில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
அநுராதபுரத்தின் தம்புத்தேகம பகுதியில் நேற்றுமுன்தினம் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
அதேநேரம் பேராதனை பகுதியில் மண் மேடு சரிந்ததில் மண்ணில் புதையுண்ட நிலையில் 72 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த நபர் ஆற்றின் அருகே நடந்து சென்றபோது அருகிலுள்ள மண் மேடு அவர் மீது சரிந்து விழுந்ததில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இதேவேளை, ருவன்வெல்ல - மாகம்மன பகுதியில், கனமழையின் போது குற்றி ஒன்றை பயன்படுத்தி கால்வாயைக் கடக்க முற்பட்ட 54 வயதுடைய ஒருவர் கால்வாயில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதனிடையே தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, 03 மாவட்டங்களில் 144 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களால் 101 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கனமழை காரணமாக கொழும்பின் பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பலத்த மழை காரணமாகச் சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு 8.30 வரை அமுலில் காணப்படும் வகையில் குறித்த மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ் நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் இன்றும் கனமழை; மூவர் பலி - பலர் பாதிப்பு 10 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.இந்நிலையில் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் மூன்று பேர் உயிரிழந்தனர். பேராதனை, ருவன்வெல்ல மற்றும் தம்புத்தேகம ஆகிய பகுதிகளில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அநுராதபுரத்தின் தம்புத்தேகம பகுதியில் நேற்றுமுன்தினம் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒருவர் உயிரிழந்தார். அதேநேரம் பேராதனை பகுதியில் மண் மேடு சரிந்ததில் மண்ணில் புதையுண்ட நிலையில் 72 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார். குறித்த நபர் ஆற்றின் அருகே நடந்து சென்றபோது அருகிலுள்ள மண் மேடு அவர் மீது சரிந்து விழுந்ததில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதேவேளை, ருவன்வெல்ல - மாகம்மன பகுதியில், கனமழையின் போது குற்றி ஒன்றை பயன்படுத்தி கால்வாயைக் கடக்க முற்பட்ட 54 வயதுடைய ஒருவர் கால்வாயில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனிடையே தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, 03 மாவட்டங்களில் 144 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களால் 101 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.கனமழை காரணமாக கொழும்பின் பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.பலத்த மழை காரணமாகச் சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 8.30 வரை அமுலில் காணப்படும் வகையில் குறித்த மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ் நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.