• Sep 15 2026

போரதீவுப் பற்றுப் பிரதேச செயலக வளாகத்தில் பயிரிடப்பட்ட அருகி வரும் தானியங்கள் அறுவடை!

Ziya / Sep 15th 2026, 3:30 pm
image

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலக வளாகத்தில் செய்கை பண்ணப்பட்டிருந்த அருகிவரும் தானியங்களின் அறுவடை இன்று செவ்வாய்கிழமை(15) இடம்பெற்றுள்ளது.


போரதீவுப் பற்றுப் பிரதேச செயலகத்தின் நலம்புச் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலக வளாகத்தில் செய்கை பண்ணப்பட்டிருந்தன வரகு, கம்பு, இறுங்கு புதினா என்பன  இதன்போது அறுவடை செய்யப்பட்டன.


போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர், விவசாயத் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


வரகு, இறுங்கு, கம்பு போன்ற தானியங்கள் மக்கள் மத்தியில் அருகி வருகின்றன. 


இந்நிலையில் விவசாயப் பிரதேசமாகவுள்ள போரதீவுப் பற்றுப் பகுதியிலுள்ள மக்கள் மத்தியில் இதனை முன்கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்குடன் இது முன்மாதிரியாக பிரதேச செயலக வளாகத்திலேயே செய்கை பண்ணப்பட்டதாக பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போரதீவுப் பற்றுப் பிரதேச செயலக வளாகத்தில் பயிரிடப்பட்ட அருகி வரும் தானியங்கள் அறுவடை மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலக வளாகத்தில் செய்கை பண்ணப்பட்டிருந்த அருகிவரும் தானியங்களின் அறுவடை இன்று செவ்வாய்கிழமை(15) இடம்பெற்றுள்ளது.போரதீவுப் பற்றுப் பிரதேச செயலகத்தின் நலம்புச் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலக வளாகத்தில் செய்கை பண்ணப்பட்டிருந்தன வரகு, கம்பு, இறுங்கு புதினா என்பன  இதன்போது அறுவடை செய்யப்பட்டன.போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர், விவசாயத் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.வரகு, இறுங்கு, கம்பு போன்ற தானியங்கள் மக்கள் மத்தியில் அருகி வருகின்றன. இந்நிலையில் விவசாயப் பிரதேசமாகவுள்ள போரதீவுப் பற்றுப் பகுதியிலுள்ள மக்கள் மத்தியில் இதனை முன்கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்குடன் இது முன்மாதிரியாக பிரதேச செயலக வளாகத்திலேயே செய்கை பண்ணப்பட்டதாக பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement