• May 13 2026

வெருகலில் மீள்குடியேறிய மக்களுக்கான புதிய வீடுகள் கையளிப்பு: பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பங்கேற்பு!

Ziya / May 13th 2026, 3:16 pm
image

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகப் பிரிவில், கடந்த கால யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களுக்காக அரசாங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஐந்து வீடுகள் நேற்று (12) உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.


வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, புதிய வீடுகளை பயனாளிகளிடம் வழங்கி வைத்தார்.


வெருகல் பிரதேச செயலாளர்  ஏ. எச். அனஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், யுத்தப் பாதிப்புகளுக்கு உள்ளாகி நீண்டகாலமாக அடிப்படை வசதிகளின்றி சிரமப்பட்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இவ்வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.


இந்நிகழ்வில் வெருகல் பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வெருகல் பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தமது சொந்த நிலத்தில் நிலையான வீடுகள் கிடைத்துள்ளமை குறித்து இப்பகுதி மக்கள் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.

வெருகலில் மீள்குடியேறிய மக்களுக்கான புதிய வீடுகள் கையளிப்பு: பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பங்கேற்பு திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகப் பிரிவில், கடந்த கால யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களுக்காக அரசாங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஐந்து வீடுகள் நேற்று (12) உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, புதிய வீடுகளை பயனாளிகளிடம் வழங்கி வைத்தார்.வெருகல் பிரதேச செயலாளர்  ஏ. எச். அனஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், யுத்தப் பாதிப்புகளுக்கு உள்ளாகி நீண்டகாலமாக அடிப்படை வசதிகளின்றி சிரமப்பட்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இவ்வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.இந்நிகழ்வில் வெருகல் பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வெருகல் பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.தமது சொந்த நிலத்தில் நிலையான வீடுகள் கிடைத்துள்ளமை குறித்து இப்பகுதி மக்கள் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement