• Sep 04 2026

முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு; வாள்களுடன் சிக்கிய ஐவர்! கொழும்பில் பதற்றம்

Chithra / Sep 3rd 2026, 10:57 am
image


கொழும்பு  - பொரளை, சகஸ்புர பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.


குறித்த முச்சக்கரவண்டி, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிலிருந்து பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, முச்சக்கரவண்டியில் பயணித்த ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மூன்று வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொலன்னாவை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு; வாள்களுடன் சிக்கிய ஐவர் கொழும்பில் பதற்றம் கொழும்பு  - பொரளை, சகஸ்புர பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.குறித்த முச்சக்கரவண்டி, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிலிருந்து பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, முச்சக்கரவண்டியில் பயணித்த ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மூன்று வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொலன்னாவை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement