• May 02 2026

தேர்தல் பிரச்சாரங்களுக்கு வழிகாட்டல் நெறிமுறைகள்; ஜனவரிக்குள் வெளியிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

shanu / Dec 19th 2025, 7:25 pm
image

தேர்தல்கள் பிரச்சாரங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


தமிழக வெற்றிக்கழகம் கடந்த செப்டெம்பரில் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். 


இந்த நிலையில் கூட்ட நெரிசல் உடபட்ட சிக்கல்களைத் தீர்க்கும் முகமாக தேர்தல் பிரச்சாரங்கள் அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் போது உரிய வழிகாட்டல் நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு அதனைப் பின்பற்ற வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வந்தன. 


இந்த வழக்கு தொடர்பான  தீர்ப்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தல் பிரச்சாரங்களை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 


எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதிக்குள் ரோட் ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


இந்த நெறிமுறைகளில் ஆட்சேபனைகள் இருந்தால் மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் இற்தத் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் பிரச்சாரங்களுக்கு வழிகாட்டல் நெறிமுறைகள்; ஜனவரிக்குள் வெளியிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தேர்தல்கள் பிரச்சாரங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழகம் கடந்த செப்டெம்பரில் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கூட்ட நெரிசல் உடபட்ட சிக்கல்களைத் தீர்க்கும் முகமாக தேர்தல் பிரச்சாரங்கள் அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் போது உரிய வழிகாட்டல் நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு அதனைப் பின்பற்ற வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வந்தன. இந்த வழக்கு தொடர்பான  தீர்ப்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தல் பிரச்சாரங்களை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதிக்குள் ரோட் ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.இந்த நெறிமுறைகளில் ஆட்சேபனைகள் இருந்தால் மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் இற்தத் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement