• Apr 18 2026

நாளை முதல் நாடளாவிய ரீதியில் அரசு மருத்துவர்கள் அடையாள வேலைநிறுத்தம்!

Ziya / Mar 30th 2026, 5:14 pm
image

நாளை காலை முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

மார்ச் 31 (நாளை) காலை 8:00 மணிக்கு ஆரம்பமாகி  ஏப்ரல் 01 ஆம் திகதி காலை 8:00 மணிக்கு நிறைவடையவுள்ளது.

24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வெளிநோயாளி பிரிவு (OPD) சேவைகள் மற்றும் கிளினிக் சேவைகள் முற்றாக ஸ்தம்பிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் தூர இடங்களில் இருந்து சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும்.

எனினும், பொதுமக்களின் நலன் கருதி அவசர சிகிச்சை பிரிவுகள் (ICU), அவசர சத்திர சிகிச்சைகள் மற்றும் மகப்பேறு சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிடில், எதிர்வரும் நாட்களில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை முதல் நாடளாவிய ரீதியில் அரசு மருத்துவர்கள் அடையாள வேலைநிறுத்தம் நாளை காலை முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.மார்ச் 31 (நாளை) காலை 8:00 மணிக்கு ஆரம்பமாகி  ஏப்ரல் 01 ஆம் திகதி காலை 8:00 மணிக்கு நிறைவடையவுள்ளது.24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம்.இந்த வேலைநிறுத்தம் காரணமாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வெளிநோயாளி பிரிவு (OPD) சேவைகள் மற்றும் கிளினிக் சேவைகள் முற்றாக ஸ்தம்பிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தூர இடங்களில் இருந்து சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும்.எனினும், பொதுமக்களின் நலன் கருதி அவசர சிகிச்சை பிரிவுகள் (ICU), அவசர சத்திர சிகிச்சைகள் மற்றும் மகப்பேறு சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிடில், எதிர்வரும் நாட்களில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement