• May 22 2025

கிளிநொச்சியில் ஒன்றுடன் ஒன்று மோதிய அரச பேருந்து மற்றும் ஹயஸ்

Thansita / May 21st 2025, 8:16 pm
image

கிளிநொச்சியில் கொழும்பில் இருந்து வந்த அரச பேருந்து மற்றும் ஹயஸ் வாகனம் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

 இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியில் இன்றையதினம் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி வந்த அரச பேருந்தானது கிளிநொச்சி உமையாள்புரத்தில் வாகனம் ஒன்றை முந்தி செல்வதற்கு முயற்சித்த போது விபத்து சம்பவித்துள்ளது.

இவ் விபத்தின் போது பேரூந்து மற்றும் வாகனத்தில் வந்த எவருக்கும் எந்த சேதங்களும் ஏற்படவில்லை. இருப்பினும் வாகனம் மட்டும் பாரியளவு சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் ஒன்றுடன் ஒன்று மோதிய அரச பேருந்து மற்றும் ஹயஸ் கிளிநொச்சியில் கொழும்பில் இருந்து வந்த அரச பேருந்து மற்றும் ஹயஸ் வாகனம் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.  இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியில் இன்றையதினம் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுகொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி வந்த அரச பேருந்தானது கிளிநொச்சி உமையாள்புரத்தில் வாகனம் ஒன்றை முந்தி செல்வதற்கு முயற்சித்த போது விபத்து சம்பவித்துள்ளது.இவ் விபத்தின் போது பேரூந்து மற்றும் வாகனத்தில் வந்த எவருக்கும் எந்த சேதங்களும் ஏற்படவில்லை. இருப்பினும் வாகனம் மட்டும் பாரியளவு சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement