இலங்கைக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஏராளமான பொருட்களை கடற்படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த 17 ஆம் திகதி நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்களின் இருப்பு கைப்பற்றப்பட்டன.
அதன்படி, கல்பிட்டியவின் கடலோரப் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜய நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இருபத்தெட்டு (28) சந்தேகத்திற்கிடமான பைகள் பரிசோதிக்கப்பட்டன.
சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட சுமார் 496 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள், 6000 வெளிநாட்டு சிகரெட் பக்கெட்டுகள், 1958 அழகுசாதனப் பொட்டலங்கள், பூச்சிக்கொல்லி திரவம் நிரப்பப்பட்ட 1146 போத்தல்கள் 15, 180 பொதிகளை கடற்படை கைப்பற்றியது.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், கடல் மார்க்கமாக பொருட்கள் கடத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடற்படையானது தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்பைக் கண்காணித்து, ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
கோடிக்கணக்கான பெறுமதியில் சிக்கிய பொருட்கள் - அதிரடியாக பறிமுதல் இலங்கைக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஏராளமான பொருட்களை கடற்படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 17 ஆம் திகதி நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்களின் இருப்பு கைப்பற்றப்பட்டன. அதன்படி, கல்பிட்டியவின் கடலோரப் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜய நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இருபத்தெட்டு (28) சந்தேகத்திற்கிடமான பைகள் பரிசோதிக்கப்பட்டன. சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட சுமார் 496 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள், 6000 வெளிநாட்டு சிகரெட் பக்கெட்டுகள், 1958 அழகுசாதனப் பொட்டலங்கள், பூச்சிக்கொல்லி திரவம் நிரப்பப்பட்ட 1146 போத்தல்கள் 15, 180 பொதிகளை கடற்படை கைப்பற்றியது. மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், கடல் மார்க்கமாக பொருட்கள் கடத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடற்படையானது தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்பைக் கண்காணித்து, ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.