• Sep 26 2026

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான நட்டஈடு - வெளியான அறிவிப்பு

Chithra / Sep 25th 2026, 12:57 pm
image


வறட்சி காரணமாகப் பயிர்ச் சேதங்களை எதிர்கொண்ட விவசாயிகளுக்கு நட்டஈட்டுத் தொகைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அறிவித்துள்ளது.


இதற்கமைய, வறட்சியினால் பாதிக்கப்பட்ட 1,490 விவசாயிகளுக்குரிய முழுமையான நட்டஈட்டுத் தொகை தற்போது வழங்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கெனச் சொந்தமான 1,115 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.


இதுவரை 57 மில்லியன் ரூபா நட்டஈடாக விநியோகிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மேலதிக நட்டஈடாக சுமார்  1,800 மில்லியன் ரூபா வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


வறட்சி காரணமாகப் பயிர்கள் சேதமடைந்தமை தொடர்பில் 6,062 விவசாயிகள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். 


அத்துடன், விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 7,957 ஏக்கர் பயிர் நிலங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தச்சபை குறிப்பிட்டுள்ளது.


பயிர்ச் சேதங்களை விரைவாகவும் துல்லியமாகவும் மதிப்பீடு செய்து நட்டஈடுகளை வழங்கும் பணிகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை மேலும் தெரிவித்துள்ளது.


வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான நட்டஈடு - வெளியான அறிவிப்பு வறட்சி காரணமாகப் பயிர்ச் சேதங்களை எதிர்கொண்ட விவசாயிகளுக்கு நட்டஈட்டுத் தொகைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அறிவித்துள்ளது.இதற்கமைய, வறட்சியினால் பாதிக்கப்பட்ட 1,490 விவசாயிகளுக்குரிய முழுமையான நட்டஈட்டுத் தொகை தற்போது வழங்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கெனச் சொந்தமான 1,115 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.இதுவரை 57 மில்லியன் ரூபா நட்டஈடாக விநியோகிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மேலதிக நட்டஈடாக சுமார்  1,800 மில்லியன் ரூபா வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.வறட்சி காரணமாகப் பயிர்கள் சேதமடைந்தமை தொடர்பில் 6,062 விவசாயிகள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். அத்துடன், விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 7,957 ஏக்கர் பயிர் நிலங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தச்சபை குறிப்பிட்டுள்ளது.பயிர்ச் சேதங்களை விரைவாகவும் துல்லியமாகவும் மதிப்பீடு செய்து நட்டஈடுகளை வழங்கும் பணிகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement