• May 16 2026

மீண்டும் எரிபொருள் வரிசை; முண்டியடிக்கும் மக்கள்

Chithra / May 15th 2026, 1:53 pm
image

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது.


குறிப்பாக அம்பாறையில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்னால் மாலை முதல் காலை வரை  நீண்ட வாகன வரிசை காணப்படுகின்றது.


தற்போது எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


எனினும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களே திட்டமிட்டு மீள வாகன வரிசையை ஏற்படுத்தியுள்ளனர் என மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.


எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சிலர் செயற்கை  தட்டுப்பாட்டை  ஏற்படுத்தி  மீண்டும் எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். 


எனினும்  சில எரிபொருள் நிலையங்களில்  தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுகிறது.


இதுதவிர எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என்பதற்காக ஒரு சில எரிபொருள் நிலையங்களில் இவ்வாறு  வரிசைகள் உருவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.



மீண்டும் எரிபொருள் வரிசை; முண்டியடிக்கும் மக்கள் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது.குறிப்பாக அம்பாறையில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்னால் மாலை முதல் காலை வரை  நீண்ட வாகன வரிசை காணப்படுகின்றது.தற்போது எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.எனினும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களே திட்டமிட்டு மீள வாகன வரிசையை ஏற்படுத்தியுள்ளனர் என மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சிலர் செயற்கை  தட்டுப்பாட்டை  ஏற்படுத்தி  மீண்டும் எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனினும்  சில எரிபொருள் நிலையங்களில்  தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுகிறது.இதுதவிர எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என்பதற்காக ஒரு சில எரிபொருள் நிலையங்களில் இவ்வாறு  வரிசைகள் உருவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement