• Jul 27 2025

சில மாகாணங்களில் அடிக்கடி மழை மற்றும் பலத்த காற்று – மக்களே அவதானம்!

Thansita / Jul 26th 2025, 7:19 am
image

மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் மற்றும் காலி,  மாத்தறை மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய நிலையில், வட மாகாணத்தில் லேசான மழை பெய்யும்

மத்திய மலைப்பிரதேசத்தின் மேற்கு சரிவுகள், வட மற்றும் வடமத்திய மாகாணங்கள், புத்தளம், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். 

புத்தளம் தொடக்கம் கொழும்பு ,காலி ஊடாக மாத்தறை வரையான கடல்  பிராந்தியங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

கல்பிட்டி தொடக்கம்  மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60  km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசும். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 

இக் கடல் பிராந்தியத்திற்கு செல்லும்  மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும்  அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான அத்துடன் காங்கேசன்துறை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 55 km  இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் வீசும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். 

பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

சில மாகாணங்களில் அடிக்கடி மழை மற்றும் பலத்த காற்று – மக்களே அவதானம் மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் மற்றும் காலி,  மாத்தறை மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய நிலையில், வட மாகாணத்தில் லேசான மழை பெய்யும்மத்திய மலைப்பிரதேசத்தின் மேற்கு சரிவுகள், வட மற்றும் வடமத்திய மாகாணங்கள், புத்தளம், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். புத்தளம் தொடக்கம் கொழும்பு ,காலி ஊடாக மாத்தறை வரையான கடல்  பிராந்தியங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.கல்பிட்டி தொடக்கம்  மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60  km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். இக் கடல் பிராந்தியத்திற்கு செல்லும்  மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும்  அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான அத்துடன் காங்கேசன்துறை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 55 km  இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் வீசும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement