• Apr 15 2026

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை!

shanu / Feb 18th 2026, 5:22 pm
image


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.


அதன்படி, தலா 2 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார உத்தரவிட்டார்.


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பொது நிதி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில், சமன் ஏக்கநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 


2023 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகப் பிரிட்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயத்திற்காக, 16.2 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சமன் ஏக்கநாயக்கவின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ முன்வைத்த பிணை கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிவான், நிபந்தனையுடனான பிணையை வழங்கினார்.

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.அதன்படி, தலா 2 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார உத்தரவிட்டார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பொது நிதி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில், சமன் ஏக்கநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 2023 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகப் பிரிட்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயத்திற்காக, 16.2 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சமன் ஏக்கநாயக்கவின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ முன்வைத்த பிணை கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிவான், நிபந்தனையுடனான பிணையை வழங்கினார்.

Advertisement

Advertisement

Advertisement