• Aug 23 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

Chithra / Aug 22nd 2025, 9:17 am
image


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்  முன்னிலையாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

முன்னதாக, இந்த விடயம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சேண்ட்ரா மெரேரா ஆகியோரிடமும் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. 

நியூயோர்க்கிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தபோது, லண்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் பிரித்தானியாவுக்கு சென்றமை தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.


முன்னாள் ஜனாதிபதி ரணில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்  முன்னிலையாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.முன்னதாக, இந்த விடயம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சேண்ட்ரா மெரேரா ஆகியோரிடமும் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. நியூயோர்க்கிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தபோது, லண்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் பிரித்தானியாவுக்கு சென்றமை தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement