அம்பாறையில் மழையுடன் கூடிய காலநிலை மாற்றம் ஏற்பட்டமையினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
நேற்று இரவு வேளையில் சில இடங்களில் மழை குறைந்து காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக மக்களது அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நாவிதன்வெளி, கல்முனை முஸ்லீம் பிரிவு, தமிழ் உப பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரதான போக்குவரத்து பாதைகள் சில வெள்ளக்காடாக காட்சி தருவதுடன் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது,மருதமுனை, நற்பிட்டிமுனை பிரதேச பிரதான பாதைகளில் நீர் நிரம்பி ஓடுவதுடன் வாகன சாரதிகள் பாதசாரிகள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.
மேலும் மழை காரணமாக வீடுகள், வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதுடன் அவற்றை வெளியேற்றும் முயற்சியில் பாதிக்கப்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வடிகான்களை விரைந்து சீர்செய்யுமாறு கல்முனை மாநகர சபையிடம் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
வீடுகள், வர்த்தக நிலையங்களுக்குள் உட்புகுந்த வெள்ள நீர் அம்பாறை மக்கள் சிரமம் அம்பாறையில் மழையுடன் கூடிய காலநிலை மாற்றம் ஏற்பட்டமையினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். நேற்று இரவு வேளையில் சில இடங்களில் மழை குறைந்து காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக மக்களது அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக நாவிதன்வெளி, கல்முனை முஸ்லீம் பிரிவு, தமிழ் உப பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரதான போக்குவரத்து பாதைகள் சில வெள்ளக்காடாக காட்சி தருவதுடன் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது,மருதமுனை, நற்பிட்டிமுனை பிரதேச பிரதான பாதைகளில் நீர் நிரம்பி ஓடுவதுடன் வாகன சாரதிகள் பாதசாரிகள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.மேலும் மழை காரணமாக வீடுகள், வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதுடன் அவற்றை வெளியேற்றும் முயற்சியில் பாதிக்கப்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் வடிகான்களை விரைந்து சீர்செய்யுமாறு கல்முனை மாநகர சபையிடம் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.