• May 03 2026

யாழ் வடமராட்சியில் வெள்ளம்-மறு அறிவித்தல் வரை செயற்பாடுகள் முற்றாக தடை!

Ziya / Nov 30th 2025, 2:51 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சீரற்ற கால நிலை தொடர்ந்து வருவதால் வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளுக்கும் மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் பகுதியில் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது

அத்துடன் வெற்றிலைக்கேணி றம்போ மற்றும் சென் செபஸ்ரியன் விளையாட்டுக்கழக மைதானம் நீரில் மூழ்கியுள்ளது.

அதிகளவான வெள்ள நீர் மைதான வளாகத்தை சுற்றி தேங்கி நிற்பதை அவதானிக்க முடிகின்றது.

இதே வேளை மீனவர்கள் தமது படகுகளை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்,பலத்த காற்று வீசியதால் நிழற்குடை ஒன்றின் கூரையும் சேதமடைந்துள்ளது.

மறு அறிவித்தல் வரை மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவிக்கப்பட்டுள்ளதுடன்  மைதான செயற்பாடுகள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக கழகங்கள் தெரிவிக்கின்றன.


யாழ் வடமராட்சியில் வெள்ளம்-மறு அறிவித்தல் வரை செயற்பாடுகள் முற்றாக தடை யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சீரற்ற கால நிலை தொடர்ந்து வருவதால் வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளுக்கும் மழை பெய்து வருகின்றது.இந்நிலையில் வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் பகுதியில் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுஅத்துடன் வெற்றிலைக்கேணி றம்போ மற்றும் சென் செபஸ்ரியன் விளையாட்டுக்கழக மைதானம் நீரில் மூழ்கியுள்ளது.அதிகளவான வெள்ள நீர் மைதான வளாகத்தை சுற்றி தேங்கி நிற்பதை அவதானிக்க முடிகின்றது.இதே வேளை மீனவர்கள் தமது படகுகளை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்,பலத்த காற்று வீசியதால் நிழற்குடை ஒன்றின் கூரையும் சேதமடைந்துள்ளது.மறு அறிவித்தல் வரை மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவிக்கப்பட்டுள்ளதுடன்  மைதான செயற்பாடுகள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக கழகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement