முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார உள்ளிட்ட 5 சந்தேக நபர்களைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது.
பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்கள், இன்று காலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
தலா 500,000 ரூபாய் ரொக்கப் பிணையில் அவர்களை விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அதேவேளையில் அவர்கள் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்தார்.
சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து 20 மில்லியன் ரூபாயைக் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, அனுத பண்டார உள்ளிட்ட இக்குழுவினர் ஜூலை 21 அன்று கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐவர் பிணையில் விடுவிப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார உள்ளிட்ட 5 சந்தேக நபர்களைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது.பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்கள், இன்று காலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.தலா 500,000 ரூபாய் ரொக்கப் பிணையில் அவர்களை விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அதேவேளையில் அவர்கள் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்தார்.சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து 20 மில்லியன் ரூபாயைக் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, அனுத பண்டார உள்ளிட்ட இக்குழுவினர் ஜூலை 21 அன்று கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.