• Apr 17 2026

கட்டுநாயக்கவில் சட்டவிரோத பொருட்களுடன் சீன பிரஜைகள் உட்பட ஐவர் கைது

Chithra / Mar 23rd 2026, 10:15 am
image


சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள், மருந்துகள் மற்றும் வாசனைத் திரவியங்களுடன் 5 பயணிகள் இன்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.


விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்களில் மொரட்டுவை மற்றும் மகரகம பிரதேசங்களைச் சேர்ந்த மூன்று இலங்கை வர்த்தகர்களும், சீன நாட்டைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணும் உள்ளடங்குகின்றனர்.


கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 70,460 வெளிநாட்டு சிகரெட்டுகள், பல்வேறு வகையான மருந்துப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


இவற்றின் மொத்தப் பெறுமதி சுமார் ஒரு கோடியே 16 இலட்சத்து 72 ஆயிரத்து 600 (11,672,600) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.


இவர்கள் அனைவரும் இன்று அதிகாலை ஹொங்கொங்கிலிருந்து 'கதே பசிபிக்'  விமான சேவைக்குச் சொந்தமான CX-611 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கட்டுநாயக்கவில் சட்டவிரோத பொருட்களுடன் சீன பிரஜைகள் உட்பட ஐவர் கைது சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள், மருந்துகள் மற்றும் வாசனைத் திரவியங்களுடன் 5 பயணிகள் இன்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் மொரட்டுவை மற்றும் மகரகம பிரதேசங்களைச் சேர்ந்த மூன்று இலங்கை வர்த்தகர்களும், சீன நாட்டைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணும் உள்ளடங்குகின்றனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 70,460 வெளிநாட்டு சிகரெட்டுகள், பல்வேறு வகையான மருந்துப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.இவற்றின் மொத்தப் பெறுமதி சுமார் ஒரு கோடியே 16 இலட்சத்து 72 ஆயிரத்து 600 (11,672,600) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் இன்று அதிகாலை ஹொங்கொங்கிலிருந்து 'கதே பசிபிக்'  விமான சேவைக்குச் சொந்தமான CX-611 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement