திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள தாயிப் நகரில் கடற்கரையில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டை பிடித்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று அதிகாலை வாகரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட கூட்டுச் சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத இரவு நேர கடல் அட்டை பிடிப்பு நடவடிக்கையை முடித்துக்கொண்டு, கடலில் இருந்து கரைக்குத் திரும்பிய சந்தேகநபர்கள், பிடிபட்ட கடல் அட்டைகளையும், இதர உபகரணங்களையும் லொறி ஒன்றில் ஏற்றிக்கொண்டிருந்த போதே இந்தச் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சீனக்குடா, கிண்ணியா மற்றும் தோப்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சட்டவிரோத நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்ட டிங்கி படகும் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், லொறி ஒன்று, வெளிப்புற படகு இயந்திரம் (40 HP) ஒன்றும் கைப்பற்றப்பட்டதோடு,
சுமார் 70 கடல் அட்டைகளும், 6 ஒட்சிசன் தாங்கிகளோடு முக்குளிப்பு உபகரணத் தொகுதி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட அனைத்துப் பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மூதூர் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
திருமலையில் கடல் அட்டை பிடித்த ஐவர் கைது - படகு, லொறி பறிமுதல் திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள தாயிப் நகரில் கடற்கரையில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டை பிடித்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று அதிகாலை வாகரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட கூட்டுச் சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத இரவு நேர கடல் அட்டை பிடிப்பு நடவடிக்கையை முடித்துக்கொண்டு, கடலில் இருந்து கரைக்குத் திரும்பிய சந்தேகநபர்கள், பிடிபட்ட கடல் அட்டைகளையும், இதர உபகரணங்களையும் லொறி ஒன்றில் ஏற்றிக்கொண்டிருந்த போதே இந்தச் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சீனக்குடா, கிண்ணியா மற்றும் தோப்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சட்டவிரோத நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்ட டிங்கி படகும் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.மேலும், லொறி ஒன்று, வெளிப்புற படகு இயந்திரம் (40 HP) ஒன்றும் கைப்பற்றப்பட்டதோடு,சுமார் 70 கடல் அட்டைகளும், 6 ஒட்சிசன் தாங்கிகளோடு முக்குளிப்பு உபகரணத் தொகுதி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட அனைத்துப் பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மூதூர் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.