• Apr 18 2026

இரு மகன்களைக் காப்பாற்றி குளத்தில் மூழ்கித் தந்தை பலி! -மிகிந்தலையில் சோகம்

shanu / Apr 18th 2026, 8:43 pm
image


மிகிந்தலை, மருதன்குளம குளத்தில் நீராடிக்கொண்டிருந்த இரு சிறுவர்களைக் காப்பாற்றச் சென்ற தந்தை ஒருவர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


மருதன்குளம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


நேற்று மதியம் தனது நண்பருடன் குளத்திற்குச் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. இதன்போது அங்கு நீராடிக்கொண்டிருந்த தனது மகன் மற்றும் மற்றொரு சிறுவன் ஆகியோர் திடீரென நீரில் மூழ்குவதைக் கண்டு, அவர்களைக் காப்பாற்ற இவர் குளத்தில் குதித்துள்ளார்.


சிறுவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட தந்தை, எதிர்பாராத விதமாகத் தான் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இருப்பினும், அவர் காப்பாற்ற முயன்ற 11 மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்களும் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.


உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு காலப்பகுதியில் நீர்நிலைகளில் விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சம்பவம் குறித்து மிகிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இரு மகன்களைக் காப்பாற்றி குளத்தில் மூழ்கித் தந்தை பலி -மிகிந்தலையில் சோகம் மிகிந்தலை, மருதன்குளம குளத்தில் நீராடிக்கொண்டிருந்த இரு சிறுவர்களைக் காப்பாற்றச் சென்ற தந்தை ஒருவர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மருதன்குளம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நேற்று மதியம் தனது நண்பருடன் குளத்திற்குச் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. இதன்போது அங்கு நீராடிக்கொண்டிருந்த தனது மகன் மற்றும் மற்றொரு சிறுவன் ஆகியோர் திடீரென நீரில் மூழ்குவதைக் கண்டு, அவர்களைக் காப்பாற்ற இவர் குளத்தில் குதித்துள்ளார்.சிறுவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட தந்தை, எதிர்பாராத விதமாகத் தான் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இருப்பினும், அவர் காப்பாற்ற முயன்ற 11 மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்களும் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு காலப்பகுதியில் நீர்நிலைகளில் விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் குறித்து மிகிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement