வாழைச்சேனை - ஊத்துச்சேனை வயல் பகுதியில், வயலுக்குச் சென்ற விவசாயி ஒருவர் கால்வாயில் உயிரிழந்த நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் வாகனேரி குளத்துமடு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய செல்லத்துரை கோபால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மழை பெய்துக்கொண்டிருந்த நிலையில் வயலுக்குச் சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது கால்வாயில் அவர் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், நீதிமன்ற அனுமதியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வயலுக்கு சென்ற விவசாயி கால்வாயில் சடலமாக மீட்பு வாழைச்சேனை - ஊத்துச்சேனை வயல் பகுதியில், வயலுக்குச் சென்ற விவசாயி ஒருவர் கால்வாயில் உயிரிழந்த நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் வாகனேரி குளத்துமடு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய செல்லத்துரை கோபால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.மழை பெய்துக்கொண்டிருந்த நிலையில் வயலுக்குச் சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கால்வாயில் அவர் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், நீதிமன்ற அனுமதியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.